10th results Tamil Nadu: இது போன்ற விஷயங்கள்தான் நம்பிக்கை தரும்.. நெகிழ வைத்த அந்த 10வது ரிசல்ட்!
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் இதில் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இன்று காலைதான் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

10ம் வகுப்பு தேர்வில் மாணவியர் 95.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 91.74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது
சிவகங்கை - 98.31% | விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76% | கன்னியாகுமரி - 96.66%
திருச்சி - 96.61% பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 7.52% கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 6.22% கூடுதலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளன.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சென்னை மாநகராட்சி பள்ளிகள் சாதனை படைத்துள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், புரசைவாக்கம் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மாநகராட்சி பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கண்ட நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் அடங்கும். 2023-24 கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளிகள் 79% தேர்ச்சியை பதிவு செய்த நிலையில், 2024-25 கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் 7% அதிகரித்துள்ளது.
நம்பிக்கை அளிக்கும் செய்தி
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் இதில் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் (97.05%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மத்திய சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகளில் 56 ஆண்கள், 9 பெண்கள் என அனைவரும் (100%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எப்படி பார்ப்பது?
படி 1: அதிகாரப்பூர்வ TN அரசின் ரிசல்ட் வலைத்தளங்களுக்குச் செல்லவும் - tnresults.nic.in அல்லது dge.tn.gov.in
படி 2: "TN 10வது தேர்வு முடிவுகள் 2025" என்று கூறும் இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: கொடுக்கப்பட்ட பக்கத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும், உங்கள் பிறந்த தேதியை பின்னர் குறிப்பிடவும்.
படி 4: உங்கள் TN 10வது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
படி 5: உங்கள் மதிப்பெண் முடிவை பதிவிறக்கி கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க விரும்பும் மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் பல மாற்று முறைகளைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் பார்த்து பதிவிறக்கம் செய்யக்கூடிய அனைத்து தளங்களுக்கும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
dge.tn.gov.in
tnresults.nic.in
apply1.tndge.org/dge-result-list
tn gov 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எப்படி உள்நுழைவது
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் TN 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க, மாணவர்கள் சில முக்கியமான உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த விவரங்கள் அவர்களின் அட்மிட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரோல் எண்
பிறந்த தேதி
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications