10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. இன்றுமுதல் ஹால் டிக்கெட்.. அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹால் டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/என்ற இணையதளம் மூலம் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அதேபோல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட் ஆனதால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதுபோல் நடக்காமல் இருக்க பள்ளிக்கல்வித்துறையும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தேர்வு அட்டவணை
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியாகியுள்ளது. அதில் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் தேர்வும், 10ஆம் தேதி ஆங்கிலம் பாடத்தேர்வும் நடக்கவுள்ளது. அதன்பின்னர் ஏப்ரல் 13ஆம் தேதி கணிதத் தேர்வும், ஏப்ரல் 15ஆம் தேதி விருப்ப மொழிப் பாடத்தேர்வும், 17ஆம் தேதி அறிவியல் தேர்வும், 20ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்தேர்வும் நடைபெறவுள்ளது.

தேர்வுக்கு இடையே விடுமுறை
அதுமட்டுமல்ல, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் பாடத்திற்கு 3 நாட்கள் விடுமுறையும், கணித பாடத்திற்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்திற்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் ஹால் டிக்கெட்
இதனைத்தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஹால் டிக்கெட் இணையதளம்
அதன்படி, https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட தகவலை கொடுத்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications