ரூ.5000 கோடி ஹனிடிராப்.. 2 நாளாச்சு இன்னுமா பில்லை தேடுறீங்க? அண்ணாமலைக்கு திமுக வைத்த 11 கேள்விகள்!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக 11 கேள்விகளை எழுப்பி உள்ளது. அவரின் ரபேல் வாட்ச் விவகாரம் சர்ச்சையானது தொடர்பாக திமுக கேள்விகளை அடுக்கி உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் பூதாகரமாகி உள்ளது. நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று பல மேடைகளில் குறிப்பிடும் அண்ணாமலை 4.40 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ரபேல் எடிஷன் பெல் அண்ட் ராஸ் வாட்சை வாங்கியது எப்படி என்ற கேள்வியை ஆளும் திமுக தரப்பு எழுப்பி உள்ளது.
முன்னதாக இதற்கு அண்ணாமலை அளித்த விளக்கத்தில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கேள்விகள்
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக 11 கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக #RafaleWatchScam என்ற டேக்கை திமுகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த டேக்கிற்கு கீழ் ரபேல் வாட்ச் விவகாரம் சர்ச்சையானது தொடர்பாக திமுக கேள்விகளை அடுக்கி உள்ளது. அந்த கேள்விகள் பின்வருமாறு,
ரேர் 'கலெக்சன்' வாட்ச் பிரியர் 🐐க்கு சம்மந்தப்பட்ட பிரஸ்மீட் வீடியோவில் இருந்து சில கேள்விகள்.
1. உலகில் 500 வாட்சுகள் மட்டுமே இருக்கும் ரேர் கலெக்சனை எந்த பச்சை துண்டு போட்ட விவசாயி பத்து லட்சத்துக்கு வாங்குவார்? அப்போ நீங்க டுபாக்கூர் விவசாயியா?
2. ரபேல் வாட்ச் நம்மளத் தவிர வேற யாரு வாங்குவாங்கன்னு சொல்றிங்க! ஆனா உலகில் யாரு வேணாலும் அந்த வாட்சை வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியாதா? மொத்த 500 வாட்ச்களில் ஒரு வாட்ச் எப்படி உங்களிடம் வந்தது என்பது தான் கேள்வி அதுக்கு பதில் சொல்லாமல், தத்தித் தனமாக உளறுகிறீர்களே ஏன்? பயமா?

ரபேல் வாட்ச்
3. ரபேல் விமானம் ஏதோ இந்தியாவிற்காவே தயாரிக்கப்படும் 'சங்கி' விமானம் என்பது போல பேசி இருக்கிறீர்களே. ரபேல் விமானம் பிரான்ஸ், எகிப்து, கிரீஸ், கத்தாரில் பயன்பாட்டிலும் குரோஷியா, இந்தோனேசியா, UAE மற்றும் பல நாடுகள் வாங்கிவருவது உங்க சங்கி மூளைக்கு தெரியாதா?
4. நான் தேசியவாதி அதனால ரபேல் வாட்ச் கட்டியிருக்கேன் சொல்ற நீங்க, உண்மையான தேசியவாதின்னா பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனத்தின் வாட்சை கட்டாமல், இந்திய நிறுவனமான Hindustan Aeronautics Ltd நிறுவன வாட்சைத் தானே கட்டியிருக்கணும்? அப்போ நீங்க தேச துரோகியா?

டைட்டன்
5. அட குறைந்தபட்ச தேசியவாதியா தமிழ்நாடு அரசு முதலீடு (TIDCO) செய்திருக்கும் TITAN வாட்சையாவது வாங்கிருக்கலாம் இல்லன்னா HMT வாட்சாவது வாங்கி தங்கள் தேசப்பற்றை காட்டியிருக்கலாமே! பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation வாட்ச்ல தான் உங்க தேசப்பற்ற காட்டுவீங்களா 🐐?
6. ரபேல் வந்ததுக்கு பிறகு இந்திய ராணுவத்தின் Rules of War மாறியிருக்குன்னு சொல்றிங்களே, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா காலனி அமைப்பதும் அருணாச்சல் பிரதேஷ் பார்டரில் இந்திய இராணுவம் குச்சிகளைக் கொண்டு சண்டையிடுவதும் தான் மாறிப்போன Rules of War-ஆ?

149வது வாட்ச்
7. 500 லிமிட்டட் எடிசன் வாட்ச்களில் 149வது வாட்சை கட்டியிருப்பதாக பீற்றிக்கொள்பவரே. ரபேல் ஊழலை மறைக்க இந்த ரேர் கலெக்சன் உங்களுக்கு வழங்கப்பட்டதா?
யார் குடுத்தா?
எங்கே வாங்கினீர்கள்?
அதன் ரசீது எங்க?
எவ்வளவு வரி கட்டினீர்கள்?
2நாளாச்சு இன்னுமா பில்ல தேடுறிங்க?
8. 5000 கோடி ரூபாயினை அமெரிக்காவுக்கு கொண்டு போன போது கண்டுகொள்ளாதவர்கள் இதையும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்தீர்களா?
இல்லை அந்த 5000 கோடி ரூபாயில் வாங்கியது தானா இந்த பத்து லட்சம் ரூபாய்
இம்போர்டட் கடிகாரம்?

ஆடு வைத்து இருப்பவர்
9. விஷயத்துக்கு வருவோம்,
யாரோ ஒருவர் பத்து லட்சத்தில் வாட்ச் கட்டுவதில் தவறில்லை.
"ரெண்டு ஆடு வச்சிருக்கேன், நான் ஒரு விவசாயி" என பொது வெளியில் கபட நாடகம் 'ஆடு'ம் ஒருவருக்கு பத்து லட்சத்துல வாட்சு எப்படி வந்தது என்பதே கேள்வி!
10. #MakeInIndia பிரச்சாரத்தால் இந்தியர்களை ஏமாற்றிவரும் உலகம் சுற்றும் வேடதாரியின் திட்டத்திற்கு அவரது கட்சியைச் சார்ந்த நீங்களே கொடுக்கும் மரியாதை இதுதானா?
பிரான்ஸ் பிராண்ட பகுமானமா வாங்கி மாட்டிக்கிறது தான் மேக் இன் இந்தியாவா?

கடைசி கேள்வி
11. சுருக்கமாக ஆடு மேய்க்கும் ஒருவருக்கு பத்துலட்சம் ரூபாய் வாட்ச் வந்தது எப்படி?
1. ரபேல் ஊழலை மறைக்க கொடுத்த கமிசனா?
2. அமெரிக்காவுக்கு கொண்டு போன 5000 கோடியில் வாங்கிய பர்சனலா?
3. ஹனிடிராப் செய்து தொழிலதிபர்கள்/ பாஜகவினரிடமே பறித்த பணத்தில் வாங்கியதா?
குறிப்பு: மேல குறிப்பிட்ட கேள்விகள் சம்மந்தப்பட்டவரே வான்டடா வந்து வாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட பேட்டியில் இருந்தும், பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களே கொடுத்த தகவல்களின்படியும் கேட்கப்பட்டவை. பதில் வருதா பாப்போம்! என்று ஆளும் திமுக தரப்பின் அதிகாரபூர்வ ஐடி விங் குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications