ராமநாதபுரத்தில் மீனவர் வீட்டு பீரோவில் மின்னிய 110 சவரன் தங்க நகைகள்.. அடுத்து என்னாச்சு தெரியுமா?
சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உச்சத்தை எட்டி வருகிறது.. சவரன் ரூ.85,600-க்கு நேற்று விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ. 86,880க்கும், தங்கம் விலை கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.10860க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 1,000 உயர்ந்து ரூ.161000க்கும், கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.161க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதனால் நடுத்தர, ஏழை மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கு நடுவில், தங்க கடத்தல்கள், நகைக்கடை கொள்ளை அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், ராமநாதபுரத்தில் நடந்துள்ள சம்பவத்தை பாருங்க
நேற்று டெல்லியில் ஒரு தம்பதியை போலீசார் கைது செய்திருந்தனர்.. அமிர்தசரஸை சேர்ந்த 35 வயது ராஜீவ், அவரது 34 வயது மனைவி சன்யா இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் நகை வாங்குவதுபோல, ஒவ்வொரு நகைக்கடைக்கும் சென்று, அங்கு நகைகளை திருடி செல்பவர்கள்.. நகையை திருடுவதற்கென்றே சில ஐடியாக்களை கையாண்டு வந்துள்ளனர்.
தங்க நகைகள்
அதாவது ஏதாவது ஒரு நகைக்கடைக்குள் நுழைந்ததும், கடை ஊழியர்களிடம் கணவன் சுவாரஸ்யமாக பேச்சு தருவாராம்.. அந்த நேரத்தில் நகைகளின் டிசைனை பார்ப்பது போல பாவ்லா செய்யும் மனைவி, திடீரென நகைகளை திருடி கையோடு கொண்டு சென்ற பைக்குள் மறைத்து கொள்வாராம். இறுதியில் நகை டிசைன் பிடிக்கவில்லை, இன்னொரு நாள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு, தம்பதி இருவரும் கிளம்பி, இன்னொரு நகைக்குடைக்குள் நுழைவார்களாம்.
அதுமட்டுமல்ல, ஒரு ஏரியாவில் உள்ள நகைக்கடைகளிலிருந்து நகைகளை திருடி முடித்ததுமே, உடனே தங்களது , செல்போன் நம்பர்களையும், யாருக்கும் அடையாளம் தெரியாதபடி தங்களது தோற்றத்தையும் மாற்றி கொள்வார்களாம். தற்போது சைபர் கிரைம் போலீஸார் இவர்களை கண்காணித்து கைது செய்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
தாமரைக்குளம் மீனவர் வீட்டில் 110 சவரன் நகை
இந்நிலையில், ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மீனவர் வீட்டில் 110 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.
உச்சிப்புளி அம்மாப்பட்டினம் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார்..
மீனவரான இவர் மங்களூரில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.. அதாவது மங்களூருவில் விசைப்படகு டிரைவராக வேலை செய்கிறார். இவரது மகள் தீபிகாவுக்கு தாமரைக்குளம் சீனிவாசனுடன் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது..
மங்களூரில் கனகராஜ் தங்கியிருப்பதால், தாமரைக்குளத்தில் மகள் வீட்டுக்கு கனகராஜ் மனைவி அடிக்கடி சென்று தங்கி விட்டு வருவாராம்.
110 பவுன் தங்க நகைகள்
அந்தவகையில் நேற்று முன்தினமும் தாமரைக்குளத்துக்கு சென்றிருக்கிறார் கனகராஜின் மனைவி.. அப்போது வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்கமாக வேலியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளனர்.,. வீட்டில் பீரோவிலிருந்த 110 பவுன் தங்க நகைகள், 45 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் வீட்டிற்கு கனகராஜ் மனைவி திரும்பியபோது, வேலிகள் உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த நகைகளும் மாயமாகியதையடுத்து, உச்சிப்புளி போலீஸில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், உடனடியாக கனகராஜ் வீட்டுக்கும் சென்று ஆய்வு செய்தனர்..
மேலும், கைரேகை நிபுணர்கள், விரல் ரேகை பதிவு போலீசார் குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.. இதற்கு பிறகு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.. இப்போது மர்மநபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications