கிளாம்பாக்கத்தில் சூப்பர் சம்பவம்.. குவிக்கப்பட்ட பேருந்துகள்.. 1,130 கூடுதல் பஸ்கள் இயக்கம்.. ஏன்?
சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. பொதுவாக முகூா்த்த மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அதை கருத்தில் கொண்டு இன்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) முகூர்த்த தினம். அதன்பின் நாளை மற்றும் நாளை மறுநாள் வாரவிடுமுறை நாட்கள். இதனால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
விமான நிலைய மாதிரியை போல இந்த பேருந்து நிலையத்தை இயக்க உள்ளனர். விமான நிலையம் இப்படி தனியாரிடம் விடப்படுகிறது. அதை தனியார் அமைப்புகள் சரியாக இயக்கியும் வருகின்றன. முக்கியமாக சுத்தமாக பயன்படுத்துவது தொடங்கி பல்வேறு அடிப்படை பணிகளை தனியார்கள் சிறப்பாக செய்கின்றன. 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தனியாரிடம் ஒப்படைக்கும் போதே இது சாத்தியம் ஆகும். இதற்காக சில தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்பந்தங்கள் கொடுக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள . 105 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி, இந்த டெர்மினஸ் நாட்டிலேயே சிறந்ததாகப் பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது
அதே சமயம் தனியார் பராமரிப்பு கண்காணிக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனம் அதிக வாகன நிறுத்தம்/நுழைவு கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹோட்டல்களில் உணவுக்கான விலையும் கட்டுப்படியாக வேண்டும். இதற்கான ஆலோசனைகளையும் செய்து வருகிறோம். இதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும்.
புனேவை சேர்ந்த பிவிஜி நிறுவனம் ஒன்று இந்த பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும். இதே நிறுவனம்தான் குடியரசு தலைவர் அலுவலகத்தையும் நிர்வகிக்கிறது. கிளாம்பாக்கம் டெர்மினஸின் உட்புறம் தயாராக உள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பயணம்: ஒரு லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த பேருந்து நிலையத்தில்.. பண்டிகை இல்லாத காலத்தில் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 (80%) அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 (20%) அரசுப் பேருந்துகள் என ஆக மொத்தம் 870 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் (30.01.2024) மாதவரம் பேருந்து முனையத்தில், தென் மாவட்டங்களுக்கான பேருந்து இயக்கத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-18, சேலம்-17. விருத்தாசலம்-6, கள்ளக்குறிச்சி-16, விழுப்புரம்-16. கும்பகோணம்-14, சிதம்பரம்-5. நெய்வேலி-11. கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-5, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-10. திருவண்ணாமலை (வழி) செஞ்சி-22, போளூர் & வந்தவாசி-20 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு; சமீபத்தில் கூட போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தினை ஆய்வு மேற்கொண்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை கேட்டறிந்தார்கள். இவ்வாய்வின் போது, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெ.பார்த்தீபன் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications