கைக்கொடுக்க வந்த உதயநிதி ஸ்டாலின்! அமைச்சரை கண்டுகொள்ளாமல் நின்ற மாணவி.. கடைசியில் செம ட்விஸ்ட்!
சென்னை: சென்னையில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி கைக்கொடுக்க சென்றபோது அவரை கண்டுக்கொள்ளாமல் மாணவி நின்றது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு திட்டம் தான் இலவச சைக்கிள் வழங்குவதாகும். அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி கல்வித்துறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவ-மாணவிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் விரைவுப்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த பணிகள் விரைந்து நடந்தன. சைக்கிள்களின் உதிரி பாகங்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் கைகளிலும் இந்த இலவச சைக்கிள்கள் சென்று சேர உள்ளனர்.
இந்நிலையில் தான் சென்னையில் உள்ள பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

மேடையில் விழா தொடங்கியது. அனைவரும் எழுந்து நின்று மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க தயாராகினர். 11ம் வகுப்பு மாணவி சிரித்த முகத்துடன் சைக்கிள் வாங்க மேடைக்கு வந்தார். அப்போது அவர் மேடையில் இருந்தவர்களை நோக்கி கைககளை கூப்பி வணக்கம் தெரிவித்து கொண்டிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே அவர் வந்த நிலையில் அவர் மாணவிக்கு கைக்கொடுத்து வாழ்த்து சொல்ல கையை நீட்டினார்.
ஆனால் மாணவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்க்காமல் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு வணக்கம் செலுத்தினார். இந்த வேளையில் செஞ்சி மஸ்தான் மாணவியிடம் உதயநிதியை பார்த்து கையை நீட்டினார். இதை பார்த்த மாணவி சிரித்தப்படி உதயநிதி ஸ்டாலினிடம் கைக்குலுக்கினார். உதயநிதியும் சிரித்தபடி மாணவிக்கு சைக்கிள் வழங்கினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications