இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?.. தமிழ் மொழி குறித்த சர்ச்சையால் ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் உருவாகி 2300 ஆண்டுகள் தான் ஆகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங்கில பாடப்புத்தகத்தில் தொன்மையான மொழிகள் உருவான ஆண்டுகள் கறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழக தமிழ் பேராசிரியான ஜார்ஜ் எல்.ஹெர்ட் என்பவர் எழுதிய பாடம் இடம் பெற்றுள்ளது.

அதில் தமிழ் கி.மு. 300ஆண்டில் உருவானதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது 2300 ஆண்டுகள் தான் ஆகியுள்தாம். அதேநேரம் சீன மொழி கி.மு. 1250 ஆண்டிலும் (3250 ஆண்டுகள் முன்பு) , சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டிலும் (4 ஆயிரம் ஆண்டுகள் முன்பு), கிரேக்கம் கி.மு.1500 (3500 ஆண்டு முன்பு) ஆண்டிலும் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமோ 4000ஆண்டுகள் பழமையானதாம்.
இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications