"புஸ்ஸாயிடுச்சு".. சுமந்த் ராமன் நறுக்.. முதுகெலும்பில்லாத அரசு: "பருத்திமூட்டை குடோன்லயே இருக்கலாம்"
சென்னை: 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு, பாஜக ரியாக்ட் செய்துள்ளது.. ஆனால், பெரும்பாலானோர், திமுக அரசின் இந்த முடிவை வரவேற்று வரும்நிலையில், முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதன்படி, தொழிலாளர்கள் வாரத்துக்கு 48 மணி நேர வேலையை தினமும் 12 மணி நேரம் என்ற அடிப்படையில் நான்கு நாள்கள் செய்ய வேண்டும். மீதமுள்ள மூன்று நாள்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்' என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திமுக அரசு: திமுக அரசு கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவை, அதன் கூட்டணிக் கட்சிகளே கடுமையாக எதிர்க்கின்றன. மற்ற எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இதைக் கடுமையாக எதிர்க்கின்றன... இந்த மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அழுத்தம் தர ஆரம்பித்துவிட்டனர்.. தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் மே 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன.
பணி நேரம்: ஆனால், பாஜக மட்டும் இந்த திட்டத்தை ஆதரித்தது. "தொழிலாளர்களுக்கு நலம் பயக்கும் என்றால் இது நல்லது. அது தொழிலாளர் விருப்பத்துக்கு ஏற்ப அமையும். தொழிலாளர்கள் நன்கு வேலை செய்தால் முதலாளிகள் பயன் அடைவர். முதலாளிகள் பயன் அடைந்தால் தொழிலாளர்களுக்கு நல்லது.. தொழிலாளர் வேலை நேரம் குறித்த விஷயத்தில் பணியின் நேரம் மட்டுமே மாற்றி அமைக்கப்படுகிறது. பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. பணி நேரம் என்பது தொழிலாளர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். எனவே இதனை தொழிலாளர்களின் விருப்பப்படிவிட்டு விடுவது நல்லது" என்று கூறியிருந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழகத்தை பொறுத்தவரை, சிஏஏ, நீட் போன்று, பாஜக ஆதரிக்கும் அனைத்து திட்டங்களுமே, மக்களுக்கு எதிரானவையே என்ற மனநிலை உள்ளபோது, இந்த திட்டம் மட்டும் ஆதரவை பெற்று தந்தது. இதற்கு காரணம், 12 மணி நேர வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியதே பாஜகதான்.. அன்று, எதிர்கட்சியாக இருந்த திமுக இதனை கடுமையாக எதிர்த்தது.. ஆனால், இன்று திமுகவே இதை கொண்டுவந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை பரவலாக ஏற்படுத்தியது.
இந்த திட்டத்தை பெரும்பாலானோர் எதிர்க்க என்ன காரணம்?
குடிமக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவருவது, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது.. அன்றைய அடிமை முறையே மறுபடியும் வந்துவிடும் ஆபத்து உள்ளது.. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளின் நலனுக்கு நாம் துணை போன மாதிரி ஆகிவிடுமே.. விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே 12 மணி நேரம் வேலை செய்யலாம், இது அனைத்துத் துறைகளுக்கும் கிடையாது என்கிறது திமுக அரசு.. ஆனால், 12 மணி நேரம் வேலை செய்ய யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் வேலை என்ற நிலைமை எதிர்காலத்தில் வந்துவிடும் என்பதைதான் பலர் எச்சரிக்கையாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதனிடையே, கூட்டணி கட்சி உட்பட நாலாபக்கமும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. இந்த திட்டத்துக்கு ஆரம்பத்தில் வரவேற்பு தெரிவித்த பாஜக, திமுக அரசு இதை வாபஸ் பெற்றதுமே, எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.. பாஜக ஆதரவாளர் சுமந்த் சி ராமன் இதுகுறித்து ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்..
முதுகெலும்பில்லாத அரசு: அதில், "முதுகெலும்பு இல்லாத அரசு. நிறைவேற்றப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே திரும்ப பெற்ற அவலம். 12 மணி நேர வேலை திட்டத்தை திரும்ப பெற்றதால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் கர்நாடகாவிற்குச் செல்லும்" என்று பாஜக ஆதரவாளர் சுமந்த் சி ராமன் பதிவிட்டுள்ளார்... இதற்கு ட்விட்டர்வாசிகள் திரண்டு சென்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், வெடித்து கிளம்பும் எதிர்ப்புகளை புரிந்து கொண்டு, திமுக அரசு, இந்த 12 மணி நேர வேலை நேர திட்டத்தை வாபஸ் பெற்றதற்கு, ஆதரவுகளும் பாராட்டுக்களும் தற்போது குவிந்து வருகின்றன.. மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை சரியானதுதான் என்றாலும், "நிறுத்தி வைப்பு" என்பதைவிட, "வாபஸ்" என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும் என்ற குரல்கள் இணையத்தில் ஒலிக்க தொடங்கி உள்ளன..!!
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications