Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் தினகரன் , கயல்விழி, சீனிவாசன், விஜயகுமார், சுமித்சரன், தேஷ்முக் சேகர் சஞ்சய் , விக்ரமன். தேவராணி உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து இடமாற்றம் செயய்ப்பட்டு வருகிறார்கள். மொத்தம் 4 மாவட்டங்களின் எஸ்பிக்கள் உள்பட 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி யாக தினகரன், திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக விஜயகுமார், தஞ்சை எஸ்.பியாக ராவலிபிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி எஸ்.பி

சிபிசிஐடி எஸ்.பி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு சென்னை துணை ஆணையராக ஷியாமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி எஸ்.பியாக இருந்து பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்த விஜயகுமார் ஐபிஎஸ், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தினகரன் ஐஜி

தினகரன் ஐஜி

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
ரயில்வே ஐ.ஜி. ஆக இருந்த சுமித்சரன் சென்னையில் ஊர்க்காவல் படை ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி தினகரன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி ஆக இருந்த கயல்விழி, சென்னை டி.ஐ.ஜி., பயிற்சி, ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்பி ஆக இருந்த சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இடமாற்றம்

இடமாற்றம்

சி.பி.சி.ஐ.டி எஸ்பி ஆக உள்ள விஜயகுமார் திருவாரூர் மாவட்ட எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஆக உள்ள ரவலி பிரியா காந்தபுனேனி , தஞ்சாவூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ஆக உள்ள தேஷ்முக் சேகர் சஞ்சய் -, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஆக உள்ள ஓம் பிரகாஷ் மீனா, சென்னை சைபர் கிரைம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேவராணி

தேவராணி

சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆக உள்ள விக்ரமன் , சென்னை சி.பி.சி.ஐ.டி - எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் எஸ்.பி ஆக உள்ள தேவராணி -சென்னை சைபர் கிரைம், எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் எஸ்.பி. ஆக உள்ள அருண்பாலகோபாலன், சென்னை புனித தோமையார் மலையின் துணை கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்பி ஆக உள்ள சியாமளா தேவி, சென்னை மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+