சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரயில்கள் இயங்காது.. விவரம்
சென்னை: சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும் கடற்கரை - எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 12 இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும் கணிசமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முழு விவரத்தை பார்ப்போம்.
சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும் கடற்கரை - எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களின் விவரங்களை பார்ப்போம்.

முழுமையாக ரத்து: சென்னை கடற்கரையிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 9.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், அதே நாளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரயில்களூம் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக, திருவள்ளூரில் இருந்து அதே தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து அதே தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து இன்று (4-ந்தேதி) மற்றும் 6, 8 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், அதே தேதிகளில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து: சென்னை கடற்கரையிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சாரரயில்களும், இரவு 10.40 மணிக்கு செங்கல்பட்டு புறப்பட்டு செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
செங்கல்பட்டிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 8.45, 9.10, 10.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும், அதே நாட்களில் திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.
சென்னை கடற்கரையிலிருந்து வரும் இன்று (4-ந்தேதி), 6, 8 ஆகிய தேதிகளில் காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலும் கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications