பஸ்ஸே நிக்கல! கனிமொழி எம்பியிடம் சொன்ன மக்கள்! களத்தில் இறங்கிய அமைச்சர்! தூத்துக்குடி மக்கள் ஹாப்பி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஓடக்கரை பஸ் ஸ்டாப்பில் எந்த பஸ்ஸும் நிற்பதில்லை என்றும், குறிப்பாக விரைவு பேருந்துகள் நிற்காததால், மக்கள் மிகுந்த அவதியடைகிறோம் என்று தூத்துக்குடி மக்கள் திமுக எம்பி கனிமொழியிடம் கூறியிருந்தனர். இது தொடர்பான வீடியோ பரவலாக ஷேரான நிலையில், தற்போது அமைச்சர் ஸ்ரீநாத் நேரடி ஆய்வு மேற்கொண்டு பேருந்துகள், ஓடக்கரை பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல உத்தரவிட்டிருக்கிறார்.

புதியதாக அமைந்திருக்கும் தவெக அரசு, மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை தொடர்ந்து கேட்டறிந்து நிறைவேற்றி வருகிறது. இதற்காக துறை வாரியாக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Kanimozhi MP

இப்படி இருக்கையில்தான் நேற்று கனிமொழி எம்பியிடம் ஓடக்கரை மக்கள் பேருந்து நிறுத்தம் குறித்த கோரிக்கையை வைத்திருந்தனர். இதற்கு பதிலளித்த கனிமொழி, எங்கள் ஆட்சியாக இருந்தால் ஒரு வாரத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டிருப்போம் என்று கூறியிருந்தார். ஆனால், மக்கள் இந்த பதிலை ஏற்கவில்லை. "ஒரு எம்பி இப்படி சொல்லலாமா? செஞ்சு தறோம் என்றுதானே சொல்லணும்! எங்க ஆட்சியா இருந்தா.. ஒரு வாரத்துல செஞ்சிடுவோம்னு எப்படி சொல்லலாம்?" என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி கவனம் பெற்றிருந்தன. இதையடுத்து இன்று ஓடைக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், பேருந்து நிறுத்தம் தொடர்பாக கனிமொழி எம்பியிடம் கோரிக்கை வைத்த பெண்ணை சந்தித்து குறைகளை கேட்டார்.

"நாங்க ரொம்ப வருஷமா இங்கதான் இருக்குறோம். ஆனா, ஓடக்கரை பஸ் ஸ்டாப்புல.. எக்ஸ்பிரஸ் பஸ் எதும் நிக்க மாட்டிங்குது. எத்தனையோ முறை எம்எல்ஏ கிட்ட சொல்லி பாத்துட்டோம். ஓட்டு கேட்க வரவங்க எல்லோரும்.. பஸ்ஸை நிப்பாட்டுறோம் என்றுதான் சொல்றாங்க.. ஆனா, எந்த பஸ்ஸும் நிக்கல! இதனால நாங்க பக்கத்து ஏரியாவுக்கு போய் பஸ் ஏற வேண்டியதா இருக்கு" என்று கூறியிருந்தார்.

இதுபோன்று மக்கள் பிரச்சனைகளை தீர்க்கத்தான் நாங்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம் என்பதை விளக்கிய அமைச்சர் ஸ்ரீநாத், அனைத்து பேருந்துகளும் ஓடக்கரை பஸ் ஸ்டாப்பில் நின்று செல்லுமாறு உத்தரவிடுவதாக கூறினார்.

இதையடுத்து அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்த அவர், அனைத்து பேருந்துகளும் ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்று போக வேண்டும் என்று உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோக்களும் தற்போது பரவலாக ஷேராகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+