சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்கள் என்னென்ன படிக்க வேண்டும்.. தெளிவா சொல்லுங்களேன்.. ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் !

பிளஸ் 2 மாணவர்கள் என்னென்ன படிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டாலும், என்னென்ன பாடத்தை படிக்க வேண்டும் என்று கேட்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது!

தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 6 மாசமாகவே மூடப்பட்டு உள்ளன... தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.. இருந்தாலும், தொற்று காரணமாக, மாணவர்களின் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்து, அதற்காக கல்வியாளர்கள் கொண்ட குழுவை தமிழகஅரசு நியமனம் செய்தது.

12th class students in confusion, and Teachers demand what to study

பிறகு, இந்த குழுவினர், பாடத்திட்டங்களை குறைக்க பரிந்துரைத்தது.. அதன்படியே 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுவிட்டும் விட்டது. ஆனால், குறைக்கப்பட்ட 40 சதவீத பாடங்கள் எவை எவையென்று தெரியவில்லை.. அதனால் இவைகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கம் சார்பில் ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது. அதில் உள்ளதாவது: "கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக 2020-21ம் கல்விஆண்டு பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. உயிரா படிப்பா என்றால் உயிர்தான் முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்ற அடிப்படையில் மாற்று ஏற்பாடாக கற்றல் பணி பாதிக்கப்படாத வகையில் தொலைக்காட்சி வாயிலாக பாடம் எடுக்கப்பட்டு வருவதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.

மேலும் இந்த நெருக்கடியான சூழலில் மாணவர்களின் மனநிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் இந்த கல்வியாண்டில் 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புமகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் குறைக்கப்பட்டப் பாடங்கள் எவை எவையென்று இதுவரை
அறிவிக்கப்படாததால் எதை படிப்பது என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். எனவே எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை மாணவர்களின் நலன்கருதி வெளியிட வேண்டும்.

எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியத் தேர்வு என்பதாலும், அகில இந்திய அளவில் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் மாணவர்கள் தங்களை நம்பிக்கையுடன் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்த கல்வியாண்டிற்கானப் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கான குறைக்கப்பட்டப் பாடத்திட்டங்களை வெளியிட்டு உதவிட ஆவன செய்யும்படி மாண்புமிகு முதல்வர்அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
12th class students in confusion, and Teachers demand what to study
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X