கோயம்புத்தூர் அசந்துடுச்சு.. யாரிந்த அஜிதா! கோவையை மலைக்க வைத்த திருநங்கை! மாறுது அடையாளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அரசு வேலையில் சேர்ந்து மக்களுக்காக பணியாற்றுவதே என்னுடைய ஆசை என்பதால், அதை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளேன்" என்று பூரித்து சொல்கிறார் அஜிதா.. யாரிந்த பெண் அஜிதா?

சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றவர் கோவை மாவட்டத்தை சேர்ந்த அஜிதா.. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி அஜிதா தான். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், அஜிதா 373 மார்க்குகளை பெற்றிருந்தார்.. அஜிதாவுக்கு BSc சைக்காலஜி படிக்க வேண்டும் என்று ஆசையாம்..

12th Public Exam result in Coimbatore and Who is this Kovai Transgender Student Ajeetha Super Inspirational Speech

இதனால், தன்னுடைய 373 மார்க்குகளுடன் நிறைய காலேஜ்களுக்கு சென்று சீட் கேட்டுள்ளார்.. ஆனால், அவருக்கு எல்லா கல்லூரிகளிலும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.. ஒருவழியாக கோவை கொங்குநாடு கல்லூரியில் அஜிதாவுக்கு சீட் கிடைத்திருக்கிறது. இதனால் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார் அஜிதா.

சைக்காலஜி: இதுகுறித்து அவர் சொல்லும்போது, "நான் சிங்காநல்லூரில் வசித்து வருகிறேன்.. வடகோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்ததால், தினமும் பஸ்ஸில் ஸ்கூலுக்கு சென்று வந்தேன்.. சைக்காலஜி படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது.. அதனால்தான் பல கல்லூரிகளுக்கு சென்று எனக்கு சீட் கேட்டேன்.. சில கல்லூரிகளில் நேரில் சென்றும் அப்ளிகேஷனும் கேட்டேன்.

ஆனால் நான் திருநங்கை என்பதால் எனக்கு யாருமே வாய்ப்பு தரவில்லை.. காலேஜில் சேர்ந்தால், என்னால் ஏதாவது சிரமம் ஏற்படும் என நினைத்து எனக்கு அப்ளிகேஷன் ஃபார்ம்கூட தரவில்லை..

முதல் சான்ஸ்: இறுதியில் கொங்குநாடு காலேஜிலிருந்து, அவங்களே என்னை அழைத்து, படிப்பதற்கு சீட் தருவதாக சொன்னார்கள்.. அவர்களாகவே அழைத்ததும் நானும் அந்த காலேஜில் சேர்ந்துக்கொண்டேன்.

இந்த காலேஜில் நான் சேர்ந்ததுமே, ஏற்கனவே சென்று சீட் கேட்ட காலேஜிகளிலிருந்து எனக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார்கள்.. அத்துடன் எனக்கு மறுபடியும் சீட் தருவதாகவும் சொல்லி அழைத்தார்கள்.. ஆனாலும், முதன் முதலில் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்த கொங்குநாடு கல்லூரியில் படிக்கவே எனக்கு விருப்பம் என்று சொல்லிவிட்டேன்.

உடை அடையாளம்: என்னை போல எத்தனையோ திருநங்கைகள் பல கல்லூரிகளில், தங்களை ஆணாக அடையாளப்படுத்தி, ஆண் உடையை அணிந்து படித்து வருகிறார்கள்.. ஆனால், என்னை நான் ஒரு பெண்ணாகவே கருதுகிறேன். காரணம் உடை என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அதில் யாருக்குமே தலையிட உரிமை கிடையாது" என்கிறாராம் அஜிதா.

சபாஷ்: ஒருகாலத்தில் வீட்டை விட்டும், ஊரை விட்டும் துரத்தப்பட்டு வந்த இந்த சமூகம், இன்று அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதுடன், இந்த சமூகத்தை தவறான பார்வையில் இருந்தும் நீக்கி வரலாறு படைத்து கொண்டிருப்பது, வரவேற்கத்தக்கது.. பெரிதும் போற்றத்தக்கது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+