தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப்பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் நெல்லை சங்கராயன்கோவில், மானாமதுரையில் தலா 9 சென்டிமீட்டர் மழையும், சோளிங்கரில் 8 சென்டி மீட்டர் மழையும், ஆர்.கே.பேட்டை, கடவனூர், மஞ்சாறு பகுதியில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பல ஊர்களில் சாரல் மழையும் பெய்துள்ளது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று முதல் 25ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 13 districts in Tamil Nadu will receive heavy rains for 5 days

வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

22,23ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர்,கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

24ஆம் தேதியன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட
மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 25ஆம் தேதியன்று தமிழ்நாடு,புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளீல் இடி மின்னலுடன் கூடிய லேசன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும்.

வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபா் 26ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக கூறியுள்ளார். தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+