இடைத்தேர்தலில் வென்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் 28ம் தேதி பதவியேற்பு
சென்னை: திமுக எம்எல்ஏக்கள் வரும் 28ம் தேதி தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்கிறார்கள்.
தமிழகத்தில் நடந்த 22 தொகுதிகள் இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக சார்பில் திருப்போரூரில இதயவர்மன், பூந்தமல்லியில் கிருஷ்ணசாமி, பெரம்பூரில் ஆர்.டி.சேகர், ஒசூரில் எஸ்ஏ சத்யா, திருவாரூரில் பூண்டி கலைவாணன், பெரியகுளத்தில் சரவணக்குமார், ஆண்டிபட்டியில் மகாராஜன், திருப்பரங்குன்றத்தில் சரவணன் ஒட்டப்பிடாரத்தில் சண்முகையா, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, தஞ்சாவூரில் நீலமேகம், ஆம்பூரில் வில்வநாதன், குடியாத்தத்தில் காத்தவராயன் உள்பட 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் 13 பேரும் வரும் 28ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநயகர் தனபால் அறையில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவியேற்கிறார்கள். இவர்கள் 13 பேருக்கும் சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
திமுகவைச் சேர்ந்த 13 பேர் பதவியேற்கும் அதே நாளிலேயே அதிமுகவின் 9 பேரும் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களும் அடுத்து சட்டசபை கூடும் போது மானியக்கோரிக்கை விவாத்தில் பங்கேற்பார்கள்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications