ஆச்சரியம்... இதுவல்லவோ ஜனநாயக சட்டமன்றம்... பேரவையை அலங்கரிக்கும் 13 கட்சிகள்..!
சென்னை: தமிழக சட்டமன்றத்திற்குள் பல ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குரல் ஓங்கி ஒலிக்க இருக்கிறது.
Recommended Video

இதுவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், என்று மட்டுமே இருந்து வந்த கட்சிகளின் பிரதிநிதித்துவம் இப்போது பரந்து விரிந்துள்ளது.
அதன்படி தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் மூலம் 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சட்டமன்ற அவையை அலங்கரிக்க உள்ளனர்.

ஜனநாயகம்
தமிழக சட்டமன்றம் என்றாலே திமுக, அதிமுக என்று தான் பலருக்கும் இன்று நினைவுக்கு வரும். ஆனால் அவ்விருகட்சிகளை கடந்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஆரோக்கியமான விவாதங்களை, ஆலோசனைகளை நல்கிய காலமும் இருந்திருக்கிறது. குறிப்பாக 2001 முதல் 2011 காலகட்டங்களில் நடந்த அத்தகைய நிகழ்வுகள் மீண்டும் திரும்ப இருக்கின்றன. பலதரப்பட்ட சிந்தனைகளை, கொள்கைகளை உடைய உறுப்பினர்களின் உரிமைக் குரல்கள் இனி ஓங்கி ஒலிக்க இருக்கின்றன.

வெவ்வேறு சிந்தனைகள்
அதன்படி திமுக, அதிமுகவை தவிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவைக்கு செல்லவிருக்கின்றனர். இதேபோல் பிராந்தியக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, கொ.ம.தே.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமக, புரட்சி பாரதம் என வெவ்வேறு சித்தாத்தங்களை கொண்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இம்முறை சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.

16-வது சட்டமன்றம்
இதனால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுமையை எதிர்கொள்ள உள்ளது. இதனிடையே எதிர்கட்சி உறுப்பினர்கள் முன் வைக்கும் கேள்விகள், சந்தேகங்கள், புகார்கள், கோரிக்கைகள் என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இந்த முறை இடம்பெற்றுள்ளதால் புதிதாக அமையவுள்ள 16-வது சட்டமன்றத்தை ஜனநாயக சட்டமன்றமாகவே கருதத் தோன்றுகிறது.

ஆரோக்கியமான
கருணாநிதி, காமராஜர், காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை ஸ்டாலினும் அளிப்பார் எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி. மேலும், ஆங்கிலத்தில் கோல்டன் பீரியட்ஸ் என்று சொல்வார்களே அதைபோல் ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தை பொற்காலமாக மாற்றும் முனைப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications