கூண்டோடு காலியாகும் பாஜக ஐடி விங்.. மேலும் 13 பேர் விலகல்.. அதிமுகவில் இணைவதாகவும் அறிவிப்பு!
பாஜக ஐடி விங்கில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக ஐடி விங்கில் இருந்து 13 பேர் மொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விலகிய அனைவரும், சிடி நிர்மல்குமாரை பின்பற்றி அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவும் அதிமுகவும் இணைந்தே கூட்டணியில் பயணித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகள் வரிசையாக விலகி அதிமுகவில் இணைவதே இந்த பூசல்களுக்குக் காரணமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக நிர்வாகிகள் விலகல்
அவருக்குப் பிறகு பல பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து விலகி வருகின்றனர். பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இணைந்தார். அதேபோல் பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை ஆதரவாளர் அமர் பிரசாத் ட்விட்டரில், கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது.

கொங்கு மண்டலம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை. நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய அதிமுகவினருக்கு கொங்கு மண்டல வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர்.

அமர் பிரசாத் பதிவு
66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது மீண்டு எழுவதற்கான அறிகுறி இல்லை. கோட்டையைப் பிடிப்பதற்கான கனவை மறந்துவிடுங்கள். அண்ணாமலை தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம் " என்று பதிவிட்டிருந்தார். இது அதிமுக நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவினர் சிலரும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்தனர்.

கூண்டோடு விலகல்
இந்த நிலையில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ளனர். சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு தலைவர் அன்பரசு, சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவைச் சேர்ந்த 10 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் 13 பேரும் சிடி நிர்மல்குமாரை பின்பற்றி அதிமுகவில் இணையப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications