டவலை காய போட போன தர்ஷன்.. கொடி கயிறே தூக்கு கயிறாக மாறிய பரிதாபம்.. சென்னையில் சோகம்!
துணி காய போட போன சிறுவன் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தான்
சென்னை: டவலை காய போடறதுக்காக போன தர்ஷனுக்கு.. அந்த கொடி கயிறே தூக்கு கயிறாக மாறிய சோகமும் அதிர்ச்சியும் சென்னையில் நிகழ்ந்துள்ளது!!
சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் லிங்கம்.. இவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார்... இவரது மனைவி உமாராணி.. இவர்களுக்கு அட்சயா என்ற மகளும் தர்ஷன் என்ற மகனும் உள்ளனர்..

தர்ஷனுக்கு 14 வயதாகிறது.. 10-ம் வகுப்பு படித்து வந்தவர்... நேற்று முன்தினம் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்த தர்ஷன் குளிக்க சென்றுள்ளர்.. ரொம்ப நேரமாகியும் ரூம் கதவை தர்ஷன் திறக்கவே இல்லை.. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பதறிபோய் கடையில் இருந்த தர்ஷனின் அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள்.
இதையடுத்து லிங்கம் அறைக்கு சென்று பார்த்தபோது, ரூமின் பால்கனியில் தர்ஷன் கீழே விழுந்து கிடந்ததை கண்டனர்.. தர்ஷனின் கழுத்தில் கயிறு ஒன்று இறுகிக் கிடந்தது.. மயங்கிய நிலையில் கிடந்த மகனை கண்டு பதறியவர், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்.. ஆனால் தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. இதை கேட்டு லிங்கம் ஆஸ்பத்திரியிலேயே கதறினார்.
தகவலறிந்து அம்பத்தூர் போலீசாரும் விரைந்து வந்தனர்.. தர்ஷன் உயிரிழந்தது குறித்து விசாரணையும் மேற்கொண்டார்கள். அப்போது தன் ரூமை பூட்டிக் கொண்டு குளித்து முடித்த தர்ஷன், டவலை காய போட பால்கனிக்கு வந்துள்ளார்.. ஆனால் கொடிகயிறு உயரத்தில் இருந்ததால், ஸ்டூலை இழுத்து போட்டு துணிகளை காய வைத்துள்ளார்.
அப்போது ஸ்டூல் தவறி கீழே விழுந்தபோது, தர்ஷனும் தடுமாறி அங்கிருந்த கொடிக்கயிற்றின் மீது விழுந்துவிட்டார். அந்த கயிறு அவரது கழுத்தை இறுக்கிவிட்டது.. பலமான கயிறு என்பதால் தர்ஷனின் கழுத்தை அறுத்துள்ளது.. இதனாலேயே அவர் இறந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்கூலுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்த பிள்ளை, இப்படி அநியாயமாக உயிரிழந்தது அந்த பகுதி மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது. மகனை கட்டிப்பிடித்து பெற்றோர் கதறியது காண்போரை கண்கலங்க செய்தது... இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications