கிளாம்பாக்கம் கிளம்பலையா? தமிழக அரசு மாஸ்.. "430" கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ரெடியா நிக்குது.. செம
சென்னை: வார இறுதி விடுமுறை நாட்கள் துவங்கியிருக்கும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் பயணிகள் வெளியூர்களுக்கு பயணமாவார்கள். அந்தவகையில், சென்னையிலிருந்து வார வாரம் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம். அந்தவகையில், நேற்று முதலே வார இறுதி விடுமுறை துவங்கிவிட்டது.

சிவராத்திரி: மேலும் நேற்று மகா சிவராத்திரி தினம் என்பதாலும், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதாலும், சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி என தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டது.
எனவே நேற்றைய தினம், வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதாலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவே, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சிறப்பு பேருந்துகள்: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களுக்கு 270 பேருந்துகள் இயக்கப்பட்டன.. அந்தவகையில், நேற்று மொத்தம் 390 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்றைய தினம் சனிக்கிழமை 430 பஸ்களும் இயக்கப்படுகின்றன..
சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு இன்று மொத்தம் 70 பஸ்கள் இயக்கப்படுகின்றன.. அதேபோல, கோவை , பெங்களூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இருந்தும் 200 ஸ்பெஷல் பஸ்கள் சிறப்புஇயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3 நாட்கள்: நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை என தொடர்ந்து 3 நாட்களுக்கு, பொதுமக்களின் வசதிக்காக மொத்தம் 1,300 பஸ்கள் இயக்கப்படுகின்றன.. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் முன்பதிவு இணையதளமான www.tnstc.in மற்றும் செல்போன் ஆப் மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications