"துண்டு சேருதோ".. ஓ "அவங்களா".. லாஸ்ட் வரை நம்புனாங்களே.. தினகரன் + சீமான்.. எடப்பாடியின் டபுள் கேம்
எடப்பாடி பழனிசாமி 2 விதமான வியூகங்களை வைத்து காய்நகர்த்தலை துவங்கி உள்ளார்
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மீது, எடப்பாடி பழனிசாமி டீமின் கவனம் குவிந்து வருவதாக தெரிகிறது. இதை திமுகவும் உற்றுநோக்கி வருகிறது.
பாஜக இல்லாமலேயே கூட்டணி என்பதைதான், எடப்பாடி பழனிசாமி டீமில் உள்ளவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.. சிவி சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் முனுசாமி என பலரும் இதைதான் விரும்புவதாக தெரிகிறது..
கடந்த முறை தேர்தலில் சறுக்கலை அடைந்ததற்கு, மக்களிடமிருந்த பாஜக எதிர்ப்பு மனநிலைதான் காரணம் என்றும், அதனாலேயே அந்த ஓட்டுக்களை சீமான் தட்டிச்சென்றதாகவும் சொல்லப்பட்டது..

தஞ்சாவூர்
அதுவும் தென்மாவட்டங்களில்தான் பாஜக மற்றும் அதிமுக வாக்குகளை சீமான் அறுவடை செய்துள்ளார்.. எனவே பாஜக அல்லாத கூட்டணியை அமைக்கும்போது, பாஜக அதிருப்தி வாக்குகள் தங்கள் பக்கம் திரும்பும் என்பதே எடப்பாடி டீமின் கணக்காக உள்ளது.. இதற்கான முதல் மணி தஞ்சாவூரில் அடிக்க துவங்கி உள்ளது.. நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலிபன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

விஜயபாஸ்கர்
அப்போது, புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், மாஜி அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் உடனிருந்தது கவனிக்கத்தக்கது.. மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒன்றியத் தலைவர் வி. திலகர், ஒன்றிய உழவர் பாசறைத் தலைவர் துரை. பார்த்திபன், மாணவர் பாசறை செயலாளர் எஸ். சுதன் மற்றும் தாம்பரம் ஜி. அருண் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். அப்போது அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கட்சிக்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தூண்டில் வலை
அதேபோல, அமமுகவின் வாக்குகளையும் எடப்பாடி குறிவைத்து வருவதாக தெரிகிறது.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. கடந்த முறை தேர்தலை எடுத்துக் கொண்டால், டிடிவி தினகரன் மட்டும் 25 தொகுதிகளில் வாக்குகளை பிரித்துள்ளார்.. அதனால்தான், ஓபிஎஸ், தினகரன் மூலம் தென்மண்டலங்களிலும் கால்பதிக்க, பாஜக முயற்சி எடுத்திருப்பதாகவும் தெரிகிறது.. மற்றொருபக்கம், டிடிவியுடன் பாஜகவுக்கு கூட்டணி தேவையா? என்ற இன்னொரு கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்கள்..

காதை கடிச்சாச்சு
காரணம், கடந்த எம்பி தேர்தலின்போது, எஸ்பிடிஐ உடன் மட்டுமே அன்று அமமுக கூட்டணி வைத்திருந்தது.. ஆனால், கடந்த முறை தேமுதிகவையும் தன்னுடன் இணைத்து கொண்டு தேர்தலை சந்தித்தது.. இதில், கடந்த 2019-ல் கிட்டத்தட்ட 23 லட்சம் வரை அமமுக வாக்குகளை பெற்றது.. ஆனால், 2021-ல் கூட்டணியுடன் சேர்த்து, 14 லட்சத்து அளவுக்குதான் அமமுக வாக்குகளை பெற்றுள்ளது.. அதாவது கூட்டணியை விரிவுபடுத்தியும்கூட, வாக்குகளில் சுருங்கிவிட்டது அமமுக.. எனவே, அமமுகடன் கூட்டணி தேவையா? என்றும் சிலர், பாஜகவின் காதை கடித்து வருவதாகவும் தெரிகிறது.

சாயும் தினகரன்
இதையும் எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமாகவே எண்ணுகிறாராம்.. ஒருவேளை பாஜகவுடன் அமமுக கூட்டணி வைத்தாலும், அந்த அதிருப்தி ஓட்டுக்களையும் களவாடலாம் என்றே பாசிட்டிவ்வாக நினைக்கிறாராம்.. அதுமட்டுமல்ல, அமமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வலையை விரித்துள்ளதாம்.. எவ்வளவு முட்டிமோதினாலும், தென்மண்டல சமூக மக்களின் ஆதரவை எடப்பாடி பெற முடியாத நிலையில், இப்படி ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. சுருக்கமாக சொல்லப்போனால், கொங்குவை தவிர, பிற இடங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கக்கூடிய, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரை வளைக்கும் முயற்சியில்தான் எடப்பாடி டீம் இறங்கி உள்ளதாக தெரிகிறது..

அன்வர்ராஜா
பிரிந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் எடப்பாடி பழனிசாமி ஈடுபட உள்ளதாக செய்திகள் வருகின்றன.. குறிப்பாக, மூத்த தலைவர் கேசி பழனிசாமியை மீண்டும் இணைத்து கொள்ளலாமா? அதேபோல, அன்வர்ராஜா, தம்பிதுரை போன்ற சீனியர்களையும் அழைத்து கொண்டு, கட்சியை பலப்படுத்தலாமா? என்ற யோசனையும் உள்ள நிலையில், நாம் தமிழர் & அமமுக பக்கம் பார்வையை வீசியுள்ளது, பாஜகவுக்கே கலக்கத்தை தந்து வருகிறதாம். இனி என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications