அடேங்கப்பா.. 14 பாயிண்ட்! அரசு பள்ளிகளில் இவ்ளோ விசயம் இருக்கா.. ஏன் தனியார் பள்ளிகளை விட பெஸ்டு?
சென்னை: கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கும் நிலையில், 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரையை மேற்கொண்டு உள்ள தமிழ்நாடு அரசு அதற்கான 14 காரணங்களை அடுக்கி உள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அத்துடன் 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரை வாகனத்தையும் அவர் கொடி அசைத்து தொடங்கினார்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் முதன்முறையாக 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரையை
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து உள்ளது. அதன் பரப்புரை வாகனத்தை மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்களுடன் இணைந்து தொடங்கி வைத்து, பரப்புரை பிரசுரங்களை விநியோகித்தோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் மாணவர்களை ஏன் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 14 காரணங்களை பட்டியலிட்டு ஒரு பிரசுரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கொண்ட அந்த பிரசுரத்தில் இருக்கும் விசயங்கள் பல ஆயிரங்கள், லட்சங்களை கட்டணமாக பெறும் தனியார் பள்ளிகளில் கூட இருக்காது.
அந்த சிறப்புகள் பின்வருமாறு..

1. ஆடல், பாடல், விளைளட்டுச் செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் 'எண்ணும் எழுத்தும்' திட்டம்
2. அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
3. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% இடஓதுக்கீடு
4. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கென 'புதுமைப் பெண்' திட்டத்தின்கீழ் 1000 ரூபாய் உதவித் தொகை.
5. வாசிப்புத் திறனை வளர்க்க தேன்சிட்டு எனும் சிறார் இதழ், நூலகத்திற்கு என்று தனி நேரம், இதழ்களின் படைப்புகளிலிருந்து வினாடிவினா போட்டிகள்.
6. திரைப்பட ரசனையையும் விமர்களப் பார்வையையும் வளர்க்க பள்ளிதோறும் சிறார் திரைப்பட விழாக்கள்.
7. இலக்கிய ஆர்வத்தை வளர்க்க பேச்சு, கட்டுரைப் போட்டிகள் உட்பட இலக்கிய மன்றச் செயல்பாடுகள்.
8. அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம்.
9. ஆட்டக் கலைகள், இசை, நாடகம், நடனம், ஒவியம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் பள்ளியில் பயிற்சி, பள்ளி தொடங்கி ஊதின அளவில் கலைத் திருவிழா.
10. பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.

11. ஆண்டுதோறும் மாநில அளவிலான கலைத் திருவிழா, சிறார் திரைப்பட விழா, சிறார் இலக்கியத் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள், வானவில் மன்றப் போட்டிகள், வினாடி வினா போட்டிகள் ஆகிவற்றில் வென்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா.
12. பள்ளி நேரம் முடிந்த பின்னும் கற்க விரும்பும் மாணவர்களுக்கென்றே 'இல்லம் தேடிக் கல்வித்' திட்டம்.
13. ஒவ்வொரு பள்ளியிலும் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் உயர்கல்வி / வேவைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க உதவி
14. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென தனிச் சிறப்பு மையங்கள், அவர்கள் மற்ற மாணவர்கயோடு பள்ளியில் இணைந்தும் கல்வி கற்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications