தீபாவளி.. சென்னையில் மட்டும் 148 இடங்களில் தீ விபத்து! தமிழ்நாடு முழுவதும் மோசம்
சென்னை: நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், பட்டாசுகள் காரணமாக சென்னையில் மட்டும் 148 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது.
நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். காற்று மாசை கட்டுப்படுத்த பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நேரக் கட்டுப்பாடு விதித்து இருந்தது. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு, காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என தெரிவித்து இருந்தது.

இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நேர விதிமுறைகளை கடைபிடிக்காமல், பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி குடிசைப்பகுதிகள் போன்றவற்றுக்கு அருகே பலர் அதிக நேரம் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சென்னையில் காற்று 300 ஐ தாண்டி பதிவானது. விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல் துறை வழக்குகளை பதிவு செய்தது. இந்த நிலையில், பல இடங்களில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட்டன.
நேற்று மட்டும் சென்னையில் 148 இடங்களில் பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள குடோன், பெரியமேடு பகுதியில் உள்ள கடை, கொளத்தூர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு, மயிலாப்பூர் சாய்பாபா கோவில் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்துகளின் காரணமாக பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்து உள்ள தீயணைப்புத் துறை, விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளது.

முன்னதாக தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், "எதிர்பாராத விதமாக தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, காவல்துறை அவசர உதவி எண்.100, அவசர உதவி ஆம்புலன்ஸ்:108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்." என்று குறிப்பிட்டு இருந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications