போதையில் அடாவடி! வேளச்சேரி சந்திரமோகனுக்கு பாடம் கற்பித்த போலீஸ்.. 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறை
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேளச்சேரி சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக காவல்துறையிடமே, வம்பிழுக்கும் வகையில் அவர்களை பணி செய்ய விடாமல் போதைஆசாமிகள் சிலர் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மதுபோதையில் அடாவடியில் ஈடுபடும் நபர்களை பிடித்து உரிய அறிவுறைகள் கூறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை மெரினா லூப் சாலையில் பெண் தோழியுடன் வந்த வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் போலீசாரிடம் அடாவடியாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் வைரலாக இந்த வீடியோ பரவியது. அந்த வீடியோ காட்சியில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரிடம் காரில் வந்த ஜோடி தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டி சண்டை போடும் காட்சி இடம் பெற்றிருந்தது. மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் சிலம்பரசன், இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஜோடியை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்து உள்ளார்.
அப்போது தான், அந்த மோதல் காட்சி நடந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ்காரர் சிலம்பரசன் புகார் கொடுத்தார். இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார், காவலரிடம் தகராறி ஈடுபட்ட ஜோடியை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில், போலீஸ்காரர் சிலம்பரசனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய ஆண்-பெண் ஜோடியின் அடையாளம் தெரிந்தது. அவர்களது பெயர் சந்திரமோகன் - தனலட்சுமி என்பது தெரியவந்தது.
வேளச்சேரியை சேர்ந்தவரான சந்திரமோகன் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரது தோழி தனலட்சுமி மைலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கும் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் காரில் வந்த போது, போலீஸ்காரர் விசாரித்ததால் கோபப்பட்டு, ஆபாசமாக திட்டி போலீஸ்காரரிடம் சண்டை போட்டு இருக்கிறார்கள்.
துரைப்பாக்கம் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 4 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார் சந்திரமோகன்.
தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் சைதப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications