Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேங்க் வேலையை இப்போதே முடிச்சிருங்க.. நவம்பரில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் நவம்பர் மாதம் பண்டிகை மற்றும் வார விடுமுறையோடு சேர்த்து மொத்தம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளுக்கு விடுமுறை என விரிவாக பார்ப்போம்.

2023 நவம்பர் 1 - கன்னட ராஜ்யோச்சவம், கட், கர்வா சவுத் காரணமாக பெங்களூரு, இம்பால் மற்றும் சிம்லாவில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

15 days of bank holidays have been announced for the November month

2023 நவம்பர் 5 - ஞாயிற்றுக்கிழமை (வார விடுமுறை)

2023 நவம்பர் 10 - ஷில்லாங்கில் கோவர்தன பூஜை, லக்ஷ்மி பூஜை, தீபாவளி காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

2023 நவம்பர் 11 - இரண்டாம் சனிக்கிழமை (வார விடுமுறை)

2023 நவம்பர் 12 - ஞாயிற்றுக்கிழமை (வார விடுமுறை)

2023 நவம்பர் 13 - கோவர்தன பூஜை, லக்ஷ்மி பூஜை, தீபாவளி காரணமாக அகர்தலா, டேராடூன், கேங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், இம்பால்மற்றும் லக்னோவில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

2023 நவம்பர் 14 - தீபாவளி (பலி பிரதிபதா), விக்ரம் சம்வத் புத்தாண்டு, லக்ஷ்மி பூஜை காரணமாக அஹமதாபாத், பெலாபூர், பெங்களூர், கேங்டாக், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது

2023 நவம்பர் 15 - பாய் தூஜ், சித்ரகுப்த ஜெயந்தி, லக்ஷ்மி பூஜை, நிங்கால் சக்குபா / ப்ரத்ரி துவிதியா காரணமாக கேங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

2023 நவம்பர் 19 - ஞாயிற்றுக்கிழமை (வார விடுமுறை)

2023 நவம்பர் 20 - சாத் பூஜையால் பாட்னா மற்றும் ராஞ்சியில் வங்கிகள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது..

2023 நவம்பர் 23 - செங் குட் ஸ்னேம், இகஸ் பாக்வால் காரணமாக டேராடூன் மற்றும் ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.

2023 நவம்பர் 25 - நான்காவது சனிக்கிழமை (வார விடுமுறை)

2023 நவம்பர் 26 - ஞாயிற்றுக்கிழமை (வார விடுமுறை)

2023 நவம்பர் 27 - குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பௌர்ணமி காரணமாக அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுஹாத்தி, ஐதராபாத், இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் தவிர நாடு முழுவதும் வங்கிகளுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

2023 நவம்பர் 30 - கனகதாச ஜெயந்தி காரணமாக பெங்களூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த விடுமுறை நாட்களின்போது வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட ஏடிஎம் மையங்கள், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், கூகுள் பே போன் பே போன்ற UPI சேவையைப் பயன்படுத்தலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+