சீன்லயே இல்ல.. பாஜகவில் இணைந்த 15 மாஜிக்கள் பின்னணி இதுதான்.. எம்ஜிஆர் கால ரிட்டயர்டு புள்ளிகள்!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். ஆனால், இவர்கள் அனைவருமே, ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருபவர்கள் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்த அதிமுக - பாஜக இந்த தேர்தலில் பிரிந்துள்ளது. இதனையடுத்து இரு கட்சிகளும், தங்கள் கூட்டணியை வலுப்படுத்த மற்ற கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை இழுக்க, பாஜகவும், அதிமுகவும் முயன்று வருவதாகத் தெரிகிறது.

பாஜகவில் இணையும் 15 மாஜி எம்.எல்.ஏக்கள்: இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேரை பாஜக இழுத்துள்ளதாக தகவல்கள் பரபரத்தன. அவர்கள் அனைவரும் இன்று டெல்லியில், பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும், தேர்தல் நெருங்கும் சூழலில், இது அதிமுகவிற்கு பெரிய அடியாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 14 பேரும், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும், டெல்லி சென்றனர். அவர்கள், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகின்றனர்.
பாஜகவில் இணைந்த மாஜிக்கள் லிஸ்ட்: பாஜகவில் இணைய உள்ள அந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மாஜி எம்எல்ஏக்களான 1. கு.வடிவேல் - கரூர், 2. P.S. கந்தசாமி - அரவக்குறிச்சி, 3. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான், 4. R.சின்னசாமி -சிங்காநல்லூர், 5. R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர், 6. M.V.ரத்தினம் - பொள்ளாச்சி, 7. S.M.வாசன் - வேடச்சந்தூர், 8. S.முத்துகிருஷ்ணன் - கன்னியாகுமரி,
9. P.S. அருள் - புவனகிரி, 10. N.R.ராஜேந்திரன், 11. R.தங்கராசு - ஆண்டிமடம், 12. குருநாதன், 13. V.R. ஜெயராமன் - தேனி, 14. பாலசுப்ரமணியன் - சீர்காழி, 15. சந்திரசேகர் - சோழவந்தான் ஆகியோர் தான் பாஜகவில் இணைந்துள்ளனர்.
ஆக்டிவ் அரசியலில் இல்லாதவர்கள்: ஆனால், பாஜகவுக்கு தாவியுள்ள இந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் அனைவருமே, நீண்ட காலமாக தீவிர அரசியலில் இயங்காமல் இருந்து வருபவர்கள் தான். கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படாமல், ஒதுங்கி இருந்து வரும் நிர்வாகிகளை தேடிப் பிடித்து, அண்ணாமலை தரப்பு பாஜகவில் சேர்த்து வருவதாக கூறப்படுகிறது.

காலாவதியான மற்றும் கைவிடப்பட்ட அரசியல்வாதிகள் மறுவாழ்வு மையமாக தமிழ்நாடு பாஜக மாறிக்கொண்டிருக்கிறது. நீண்ட காலத்திற்கு முன்பு எம்.எல்.ஏ, எம்.பியாக இருந்து, அதன் பிறகு, ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு, பதவி ஆசை காட்டி தங்கள் கட்சிக்கு பாஜக அழைத்து வருவதாகவும், ஓரங்கட்டப்பட்ட அந்த நிர்வாகிகளுக்கு தொண்டர்கள் செல்வாக்கு எல்லாம் இல்லை என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
சால்வையை போட்டு: முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் தங்கள் கட்சியில் சேர்கிறார்கள் எனக் கூறி, மக்கள் மத்தியில் பாஜகவை பிரமாண்டமாக காட்சிப் படுத்துவதற்காக, தீவிர அரசியலிலேயே இல்லாத மாஜிக்களை எல்லாம், சால்வையை போட்டு பாஜகவிற்கு இழுத்து வருகிறார்களாம்.
உதாரணத்திற்கு கரூர் முன்னாள் எம்.எல்.ஏ வடிவேல் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் எம்.ஜி.ஆர் காலத்தில் 1977 மற்றும் 1984ல் அதிமுக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி சார்பில் போட்டியிட்டு கரூரில் தோல்வியடைந்தார். அதன் பிறகு, அதிமுக சார்பில் அவருக்கு சீட் வழங்கப்படவே இல்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓபிஎஸ் அணியில் இணைந்தார் வடிவேல். ஓபிஎஸ் - எடப்பாடி இணைந்த பிறகும், கரூர் மாவட்ட அதிமுகவில் வடிவேலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான், 75 வயதாகும் வடிவேல், பாஜகவில் இணைந்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏவாக இருந்து, பின்னர், பெரிய பொறுப்புகள் இல்லாதவரை பாஜக தங்கள் பக்கம் சேர்த்துள்ளது.
எம்ஜிஆர் கால எம்.எல்.ஏக்கள்: அதேபோல, அரவக்குறிச்சி தொகுதியில் 1980ல் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ ஆனவர் பி.எஸ்.கந்தசாமி. அதன் பிறகு பெரிய பொறுப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக அவரை தங்கள் பக்கம் இழுத்துள்ளது.
வலங்கைமான் முன்னாள் எம்.எல்.ஏ கோமதி சீனிவாசன், எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின்னர் திமுகவில் இணைந்தார். கடைசியாக 1996-2001ல் திமுக எம்.எல்.ஏவாக இருந்தார். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில்ம் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கோமதி சீனிவாசன் பாஜகவில் இணைந்துள்ளார்.
சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி. இவர் பதவியில் இருந்தபோது, தொழிற்சங்க நிதியில் இருந்து ரூ.8 கோடியை முறைகேடு செய்ததாக, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜக்கையன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சியை விட்டும் நீக்கப்பட்டார்.

ஓரங்கட்டப்பட்டவர்கள்: கோவை தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை என்கிற துரைசாமி வாய்ஸ் இழந்த அரசியல்வாதி ஆகிவிட்டார். எஸ்.பி.வேலுமணி ஆதரவில் அப்பகுதியில் அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சேலஞ்சர் துரை அமமுகவுக்குச் சென்றார். கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்நிலையில், அவர் பாஜகவுக்கு தாவியுள்ளார்.
அதேபோல பொள்ளாச்சி எம்.வி.ரத்தினமும் எம்.ஜி.ஆர் காலத்தில் அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ ஆக இருந்தவர். வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ வாசன், 1977ல் முதல் முறையாக எம்.ஜி.ஆர் முதல்வரானபோது அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். தேனி ஜெயராமன், 1977,1980, 1984ல் எம்.எல்.ஏவாக இருந்தவர். அதன்பிறகு பெரிய பொறுப்புகள் எதையும் வகிக்கவில்லை.
சோழவந்தான் சந்திரசேகர் காங்கிரஸ் கட்சி சார்பில், 1984,1987ல் எம்.எல்.ஏவாக இருந்தவர். பின்னர் இவர் அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு, கடந்த பல ஆண்டுகளாக கட்சியில் முக்கிய பொறுப்பில் இல்லை. இதுபோன்று, ஆக்டிவ் அரசியலில் இல்லாத மாஜி எம்.எல்.ஏக்களை அழைத்து வந்து கட்சியில் சேர்த்து, பாஜக வளர்ந்து வருவதாக பிம்பத்தை கட்டமைப்பதாக அதிமுகவினர் விமர்சிக்கின்றனர்.
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications