தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய போகும் சென்னையை ஒட்டிய 15 ஊராட்சிகள்? எந்த ஊரெல்லாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முயற்சி சென்னையின் புறநகர் பகுதியில் நிலவும் நீண்ட கால சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்கிறார்கள்.

இதன்படி மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கௌல் பஜார், பெரும்பாக்கம், முடிச்சூர், திருசூலம், சீத்தாலம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர் போன்ற பகுதிகள் இணைக்கப்பட உள்ளதாகவும், இப்படி செய்தால் அதிக நிதி கிடைக்கும் என்பதுடன் சிறந்த வசதிகள் கிடைக்கும் என்கிறார்கள்.

15 panchayats in Chennai Area to be merged with Tambaram Corporation? Do you know which town?

சென்னையை அடுத்து உள்ள தாம்பரம் பெரு நகராட்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது. இந்நிலையில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளையும், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சியை உருவாக்கியது தமிழக அரசு.

இதற்கான அரசாணை கடந்த 2021 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து புதிதாக வார்டுகள் வரையறை செய்யப்பட்டு 70 வார்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. அதன்பின்னர் தாம்பரம் மாநகராட்சியை 5 மண்டலங்களாக பிரித்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி மண்டலம் 1-ல் வார்டுகள் 1 முதல் 8 வரையும் மற்றும் 10,11,12, 29,30,31 என மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. மண்டலம் 2-ல் வார்டுகள் 9,13 முதல் 21 வரை மற்றும் 24, 26,27,28 என மொத்தம் 14 வார்டுகள் இருக்கின்றன. மண்டலம் 3-ல் 22, 23, 25 மற் றும் 34 முதல் 44 வரை மொத்தம் என 14 வார்டுகள் இருக்கின்றன. மண்டலம் 4-ல் வார்டு 32, 33 மற்றும் 49 முதல் 61 வரை என மொத்தம் 15 வார்டுகள் இருக்கின்றன. மண்டலம் 5-ல் வார்டு 45 முதல் 48 வரையும் மற்றும் 62 முதல் 70 வரையும் என மொத்தம் 13 வார்டுகள் இடம் பெற்று இருக்கின்றன.

இந்நிலையில் தாம்பரத்திற்கும் சென்னைக்கும் இடையில் சில ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் சரியாக வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேறாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சரியாக தாம்பரம் தொடங்கும் முன்பும், சென்னை முடியும் இடத்திலும் கோவிலம்பாக்கம் ஊராட்சி இருக்கிறது.

இங்கு சாலை மற்றும் குடிநீர் பணிகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற புகார் உள்ளது. இதேபோல் தான் மேடவாக்கம், கௌல் பஜார், பெரும்பாக்கம், முடிச்சூர், திருசூலம், சீத்தாலம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர் பகுதிகளும் உள்ளன. இங்கு சென்னை, தாம்பரத்தை போன்று பணிகள் விறுவிறுப்பாக நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்த சூழலில் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கௌல் பஜார், பெரும்பாக்கம், முடிச்சூர், திருசூலம், சீத்தாலம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர் போன்ற பகுதிகள் இணைக்கப்பட உள்ளதாகவும், இப்படி செய்தால் அதிக நிதி கிடைக்கும் என்பதுடன் சிறந்த வசதிகள் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆனால் அதேநேரம் சென்னையுடன் 2011ல் இணைக்கப்பட்ட அம்பத்தூர், மடிப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இன்றும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+