சென்னை வெள்ள பாதிப்பு.. கேன்சல் ஆன வந்தே பாரத்.. இன்று எத்தனை ரயில்கள் ரத்து? லிஸ்ட் இதோ
சென்னை: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில், திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் உள்பட 15 ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. புயல் கரடைய தொடர்ந்ததையடுத்து 2 நாட்களாக சென்னையில் மழை பெய்யாமல் வெயில் அடித்து வருவதால் நிலைமை சீரடைந்து வருகிறது. எனினும் ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வடியாததால் மீட்பு, நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல் மக்களின் இயல்பு வாழ்க்கையும் மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இதேபோல் புயல் மற்றும் வெள்ளத்தால் போக்குவரத்து சேவையும் முடங்கி போய் இருந்தது. இந்த நிலையில் விமான சேவை தொடங்கி விட்டது. ரயில் சேவையும் தொடங்கியுள்ளது. எனினும் ஒருசில இடங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் முழுமையாக போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட வில்லை.
இந்த நிலையில் இன்று விழாயக்கிழமையும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் மற்றும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் என மொத்தம் 15 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
1. சென்ட்ரல் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி அந்தமான் எக்ஸ்பிரஸ்.
2. சென்ட்ரல் விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
3. சென்ட்ரல் மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
4. சென்ட்ரல் மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ்.
5. சென்ட்ரல் - கோவை கோவை எக்ஸ்பிரஸ்.
6. சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்.
7. சென்ட்ரல் திருப்பதி எக்ஸ்பிரஸ்.
8. திருப்பதி - சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்.
9. சென்ட்ரல் திருப்பதி எக்ஸ்பிரஸ்.
10. திருப்பதி - சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்.
11. சென்ட்ரல் கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்.
12. சென்ட்ரல் விஜயவாடா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்.
13. சென்ட்ரல் கேஎஸ்ஆர் பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்.
14. சென்னை எழும்பூர் திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில்.
15. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் என 15 ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications