மொத்தம் 15 வெரைட்டி.. சாண்ட்விச் ஸ்வீட் டூ வெற்றிலை பாயாசம் வரை.. விஜய் மாணவர்கள் நிகழ்ச்சி மெனு
சென்னை: நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று 2வது கட்டமாக கல்வி விருதுகள் வழங்குகிறார். இந்நிலையில் தான் இன்றைய நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக சாண்ட்விச் ஸ்வீட் முதல் வெற்றிலை பாயாசம் வரை என்று மொத்தம் 15 வெரைட்டிகளில் தயாரிக்கப்பட்டுள்ள உணவு பட்டியல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
விஜய்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பொதுவாக பெரும்பாலான நடிகர், நடிகைகள் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகு தான் அரசியலுக்குள் நுழைவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் நடிகர் விஜய் உச்சத்தில் இருக்கும்போதே அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.

அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம். வரும் 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இந்நிலையில் தான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு முதல் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகளுக்கு விஜய் கல்வி விருது வழங்கி வழங்கினார்.
தற்போது கட்சி தொடங்கி உள்ள நிலையில் மீண்டும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 28 ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடந்த நிகழ்ச்சியில் 21 மாவட்டங்களில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு சட்டசபை தொகுதி வாரியாக 10ம் வகுப்பில் 3 பேர், பிளஸ் 2வில் 3 பேர் என்று விஜய் விருது வழங்கினார். இதையடுத்து மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் இன்று கல்வி விருது வழங்க உள்ளார்.
இந்நிலையில் தான் விழாவில் சுமார் 700க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் பெற்றோர், சகோதர, சகோதரிகளுடன் பஸ்களில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதேபோல் நடிகர் விஜயின் கட்சி நிர்வாகிகள், பவுன்சர்கள் என்று சுமார் 4 ஆயிரம் பேர் வரை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிய வாய்ப்புள்ளது. இவர்களுக்கு சுடச்சுட மதிய உணவு தயாராகி வருகிறது.
அதன்படி மொத்தம் 15 வெரைட்டியான டிஷ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் சாண்ட்விச் ஸ்வீட் முதல் வெற்றிலை பாயாசம் வரை இடம்பெற உள்ளது. டிஷ் வாரியாக பார்த்தால் நடிகர் விஜயின் இன்றைய மதிய விருந்து பட்டியலில் சாதம், வடை, அவியல், அப்பளம், மோர், வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி தயாராகி வருகிறது.
அதேபோல் அவரை மணிலா பொரியல், உருளை காரக்கறி, ஆனியன் மணிலா, செட்டிநாடு வத்தக்குழம்பு, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், சாண்ட்விச் ஸ்வீட் உள்ளிட்டவை இடம் பெற உள்ளன. நடிகர் விஜய் தரப்பில் மாணவ-மாணவிகளுக்கு இப்படி தடபுடலாக விருந்து அளிப்பது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறை மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும்போது நடிகர் விஜய் சார்பில் இப்படியான விருந்து பரிமாறப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications