Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் சரி.. அந்த 1500 வீடியோ எங்கே?.. யார் கிட்ட இருக்கு.. பெரும் கவலையில் மக்கள்!

பொள்ளாச்சி சம்பவத்தின் 1500 வீடியோக்களும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 பேர் கைது.. சிபிசிஐடி விசாரணை.. வாக்குமூலம்... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்! ஆனால் எங்கே அந்த 1500 வீடியோக்கள்! என்பதுதான் பெரிய கேள்வியாக எழுகிறது!

பொள்ளாச்சி சம்பவத்தில் 4 பேர் கைதாகி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் உண்மையிலேயே போற்றத்தக்கது!

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இடைக்கால இழப்பீடாக 25 ரூபாய் லட்சம் வழங்க உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது! அதேபோல கவனக்குறைவாக செயல்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதும் பாராட்டத்தக்கது!

4 வீடியோக்கள்

4 வீடியோக்கள்

ஆனால் காவல்துறை உயர் அதிகாரி அன்றைக்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, "4 பேர் மட்டுமே குற்றவாளிகள், 4 வீடியோக்கள் மட்டுமே வெளியாகி உள்ளன" என்றார். அதுவும் சிபிசிஐடி, சிபிஐ என்ற விசாரணை பேச்சு ஆரம்பமாகும் முன்பேயே, வழக்கின் தொடக்கத்திலேயே இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்டை உயரதிகாரி சொல்லி விடுகிறார்.

யார் முன் வருவர்?

யார் முன் வருவர்?

இந்த விஷயம் கோர்ட்டுக்கு வரும்போது நீதிபதிகளோ "பொள்ளாச்சி விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது" என்று சொன்னதுடன், "இதுதொடர்பாக புகார் அளிக்க இனி யார் முன்வருவர்?'' எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

யாரிடம் இருக்கிறது?

யாரிடம் இருக்கிறது?

ஆக... காம கொடூரர்கள் மொத்தம் 20 பேர் என சொல்லப்பட்ட நிலையில் 4 பேர் தவிர வேறு யாரையும் இன்னும் விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வரவில்லை. அதேபோல, அந்த 1500 வீடியோக்களும் இப்போது எங்கே இருக்கிறது? யாரிடம் இருக்கிறது? என்பதும் வெளிவரவில்லை.

பாதுகாக்க வேண்டும்

பாதுகாக்க வேண்டும்

1500 வீடியோக்களுமே ஆபாச வீடியோக்கள்தான்.. இளம்பெண்களை கதற கதற காம வேட்டையாடும் வீடியோக்கள். இதனை காவல்துறை பத்திரப்படுத்த வேண்டும்.. அதே சமயம் பாதுகாக்கப்படவும் வேண்டும். இவை அத்தனையும் ஆவணங்கள். இதுவரை வெளியே வராமலும், அது குறித்த தகவலும் இல்லாமல் இருப்பதை பார்த்தால் எங்கே அவை அழிக்கப்பட்டுவிட்டனவோ என்று சந்தேகமாக இருக்கிறது.

விசாரணை

விசாரணை

அதே சமயம், இந்த 1500 வீடியோக்களை வைத்து வேறு எந்த அசம்பாவிதமும், அநியாயமும் நடந்துவிடக்கூடாது என்றும் பீதியாக உள்ளது. இந்த சந்தேகத்தை காவல்துறைதான் போக்க வேண்டும்! குற்றவாளிகளை மையப்படுத்தி விசாரணையும், சோதனையும் நடைபெறுகிறதே தவிர... அந்த 1500 வீடியோக்கள் என்ன ஆனது என்பதை பற்றி யாருமே வாய் திறக்காமல் இருப்பது பெருத்த சந்தேகமாகவும், மர்மமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+