அலுங்காம குலுங்காம.. சுண்டியிழுக்கும் 16 பெட்டி.. படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்! சென்னை ஹேப்பி
சென்னை: ஸ்லீப்பர் வந்தே பாரத் தயாரித்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த தகவல்கள் தினந்தோறும் இணையத்தை வலம் வர துவங்கியிருக்கின்றன. இந்த நிலையில், படுக்கை வசதி கொண்ட இந்த ரயிலின் சேவை எப்போது என்பது குறித்து, ரயில்வே அதிகாரிகள் சில நம்பிக்கையான செய்தியை தெரிவித்திருக்கிறார்கள்.
வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை, ரயில் பயணிகளின் வரவேற்பை அதிகமாகவே பெற்று வருகிறது.. அதிநவீன வசதிகள், விரைவான பயணம், போன்றவை பல்வேறு காரணங்களினால், பொதுமக்கள் இந்த வந்தே பாரத் ரயில்களை அதிகமாக பயன்படுத்த துவங்கியிருக்கிறார்கள்.

சொகுசான வசதிகள் அதிகமாக உள்ளதால், வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் எப்போதும் முழுமையாக நிரம்பி செல்கின்றன. இந்த ரயிலுக்கான வரவேற்பை பார்த்ததுமே, ரயில்வே நிர்வாகமும் அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது..
ஸ்லீப்பர் செல்: வந்தே பாரத் ரயில்கள் மட்டுமல்லாமல், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில்கள், வந்தே மெட்ரோ ரயில்கள், அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் என வகை வகையான ரயில்களை பொது மக்களின் பயன்பாட்டுக்காக தயார் செய்து வருகிறது. இந்த ரயில்களில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதுதான், ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களாகும்.
பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில், முதல் சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த வருடம் ஆரம்பமானது.. இப்போது அந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளது... முற்றிலும் படுக்கை வசதியுடன் இந்த ரெயில் பெட்டிகள் கடந்த சில மாதங்களில் தயாரிக்கப்பட்டதாகும்.
பெங்களூர்: சென்னை ஐ.சி.எப்.-தான் இதற்கான மாடலை தயாரித்து பெங்களூரில் உள்ள நிறுவனத்திடம் கொடுத்திருந்தது.. அதன்படியே, இந்த ஸ்லீப்பர் ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்கு தூங்கும் வசதி படுக்கைகள் நவீன தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன... 160 கி.மீ. வேகத்தில் சென்றாலும் பெட்டிகள் குலுங்காமல் இருக்கவும் விரைவாக கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலுக்கான சோதனை ஓட்டம் விரைவில் துவங்க உள்ளதாக நேற்றுமுன்தினம் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், எப்போது சோதனை ஓட்டம் நடைபெறும்? எப்போது இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும்? என்பது குறித்தும் ரெயில்வே அதிகாரிகள் கூடுதல் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
சோதனை ஓட்டம்: இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "வந்தே பாரத் முதல் படுக்கை வசதி ரெயில் தயாரிப்பு பணிகள் முடிந்து ஐ.சி.எப். தொழிற்சாலைக்குள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது... இதையடுத்து, சென்னையில் இருந்து ஏதாவது ஒரு நகருக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்... டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த சொகுசு ரயில் விடப்படும்.
படுக்கை வசதி வந்தே பாரத் ரெயில் முதல்முதலாக எந்த நகருக்கு விடப் படும் என்பதை ரெயில்வே வாரியம்தான் முடிவு செய்யும். சென்னையில் இயக்கப்படுமா? அல்லது வேறு நக ரங்களுக்கு ஒதுக்கப்படுமா? என்பது குறித்தும் ஓரிரு மாதங்களில் தெரிய வரும் என்கிறார்கள்.
எதிர்பார்ப்பு: ஆனால், சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட, முதல் ரயில் எப்படியும் சென்னைக்கு இயக்கப்படும் என்றே பயணிகள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறதாம். இந்த ரயிலை மும்பைக்கு அனுப்பபோவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் கசிந்து வருவதால், இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வசதிகள்: இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில், 11 மூன்றடுக்கு ஏசி தூங்கும் வசதி பெட்டிகளும், 4 இரண்டு அடுக்கு தூங்கும் வசதி பெட்டிகளும், ஒரு முதல் வகுப்பு தூங்கும் வசதி ஏசி பெட்டி என மொத்தம் 16 பெட்டிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
3 அடுக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 611 படுக்கைகளும், இரண்டுக்கு தூங்கும் வசதி பெட்டிகளில் 188 படுக்கைகளும், முதல் வகுப்பு பெட்டியில் 24 படுக்கைகளும் உள்ளன. உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதியுடன் ரீடிங் லைட்,கண்காணிப்பு கேரமா, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிவறைவசதி, தீ பாதுகாப்பு வசதி உள்பட பல வசதிகள் உள்ளதால் எதிர்பார்ப்புகள் கூடிவருகின்றன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications