16 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி மாற்றம்.. தமிழக அரசு போட்ட திடீர் ஆர்டர்!
சென்னை: 16 காவல்துறை உயர் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். டிஜிபி ரேங்கில் உள்ள அதிகாரி உட்பட தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

குடிமைப் பணிகள் சி.ஐ.டி டிஜிபி வன்னியப்பெருமாள், ஊர்க்காவல் படை கமாண்டண்ட்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஐஜி தமிழ் சந்திரன் ஐபிஎஸ், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்த செந்தில் குமாரி ஐபிஎஸ், சென்னை குற்றப்பிரிவு காவல்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்.பி சாம்சன் சென்னை போதைப்பொருள் தடுப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். தென்காசி எஸ்.பியாக சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், கரூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக, சிபிசிஐடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி இணை இயக்குநர் ஐ.ஜி ஜோஷி குமார் ஐபிஎஸ், குடிமைப் பணிகள் சிஐடி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவதனம், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த முன்னாள் தென் சென்னை இணை ஆணையர் திஷா மிட்டல், டெக்னிக்கல் சர்வீசஸ் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த தீபா சத்யன், சென்னை காவல்துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications