சசிகலாவின் 1500 கோடி சொத்துக்கள் முடக்கமா .. இல்லை என்கிறார் வக்கீல்.. நடந்தது என்ன?
சசிகலாவின் 1600 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் என்று கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: சசிகலா ரூ.1500 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும், அதை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. ஆனால் இந்த தகவலை சசிகலாவின் வக்கீல் மறுத்துள்ளது உண்மை தன்மை என்ன என்ற ஆர்வத்தை மக்களிடையே கிளப்பி விட்டுள்ளது.
பணமதிப்பு விவகாரம் தலையெடுத்த சமயம் அது... ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் பேங்குகளில் தந்து மாற்றிக் கொள்ளலாம் என்ற அவகாசம் நாட்டு மக்களுக்கு தரப்பட்டது. அதன்படி பொதுமக்களும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டனர்.
ஆனால், அந்த சமயத்தில் சசிகலா மட்டும், தன்னிடம் இருந்தத 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளாமல், பதிலுக்கு அந்த பணத்தில் சொத்துக்கள் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது ரூ.1500 கோடிக்கு அந்த சமயத்தில் சசிகலா சொத்துக்களை வாங்கினாராம்.

உரிமையாளர்கள்
குறிப்பாக ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான், 7 நிறுவனங்களாக வாங்கி, அதனை அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயரிலேயே செயல்படவும் அனுமதி தந்திருந்தார் சசிகலா. இருந்தாலும், இந்நிறுவனங்களை தன்னுடைய கன்ட்ரோலில்தான் சசிகலா வைத்திருந்ததாக தெரிகிறது.

ரகசிய தகவல்கள்
இப்படி ரூ.1500 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்களை சசிகலா வாங்கியிருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைக்கவும்தான், 2017, நவம்பரில் சசிகலா குடும்பத்தினரல் அதிரடி ரெயிடு நடத்தப்பட்டது. ஜெயா டிவி, மிடாஸ் மதுபான ஆலை என ஒரு இடத்தையும் விடவில்லை.

கட்டு.. கட்டாக..
சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இந்த ரெய்டில் வருமான வரித்துறையினர் வசம் ஏராளமான ஆவணங்கள், நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் காட்டாத பணம், ஆவணங்களை அதிகாரிகள் மூட்டை மூட்டையாக கட்டி எடுத்தும் சென்றனர்.

1500 கோடி ரூபாய்
அந்த ஆவணங்கள் எல்லாமே ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டன. இதற்கு பிறகுதான் அதிகாரிகள் சம்மன் அனுப்பி சசிகலா குடும்பத்தில் இருந்து ஒவ்வொருத்தராக கூப்பிட்டு விசாரித்தனர். சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடமும் விசாரணை நடத்தினர். 2 வருட தீவிர விசாரணைக்கு பிறகு, 60 போலி நிறுவனங்களை சசிகலா குடும்பத்தினர் நடத்தி வருவதும், அந்த போலி நிறுவனங்கள் மூலம் ரூ..1500 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.

ரூ.1500 கோடி
இதற்கு பிறகு பினாமி பெயரில் நடந்து வந்த பல போலி நிறுவனங்கள் முடக்கம் செய்து, அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்தனர். அதன்படி இப்போதைக்கு 9 நிறுவனங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் ரூ.1,600 கோடிக்கு வாங்கப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்களை ஆங்கில நாளிதழ் டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ளது.

செந்தூர்பாண்டியன்
ஆனால், இந்த தகவல்களை அனைத்தும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் மறுத்துள்ளார். சசிகலா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வெளிவந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணி உள்ள அதே சமயம், உண்மை தன்மை என்ன என்பதையும் விரைவில் தெளிவுபடுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications