பொங்கலுக்கு முன்னாடியே கிளம்பி வருது.. தமிழக அரசு தந்த சூப்பர் சர்ப்ரைஸ் பாருங்க.. மக்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நலன் கருதி, ஒவ்வொரு பண்டிகை நாட்களின்போதும், தமிழக போக்குவரத்து கழகம், சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வரும்நிலையில், தற்போதும் குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது...

சிறப்பு பஸ்கள்: ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களை இயக்கி, பொதுமக்களின் அலைச்சலையும், தவிப்பையும் தீர்த்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால், போக்குவரத்து துறை, பயணிகளின் அக்கறையில் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஏகப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில், விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போவதால், அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது.

1666 New Government Buses and Tamil Nadu transport department major decision due to Pongal Festival

அதாவது, பொங்கல் பண்டிகைக்குள் அரசு போக்குவரத்து கழகங்களில், 1,666 புதிய பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருவதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும், அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்த நிலையில், அதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு வரப்போவதாக அதிகாரிகள் கூறியிருப்பது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை: இப்போதைக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், மொத்தம் 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, புதிய பஸ்கள் எதுவும் வாங்கப்படவில்லை.. அதனால், வரும் 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்குள், புதிய பஸ்களை வாங்க, போக்குவரத்து துறை ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லும்போது, இப்போதைக்கு 800க்கும் மேற்பட்ட பஸ்கள் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. எனவே, பயணிகளின் எண்ணிக்கை மறுபடியும் அதிகரித்து வருகிறது.

பெருத்த நம்பிக்கை: பொங்கல் பண்டிகையின்போது, பஸ் பயணியரின் தேவை அதிகமாக இருக்கும் என்றாலும், இப்போதுள்ள பஸ்களை வைத்து, சமாளிப்பது சிரமம்.. அதனால்தான், வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு, 1,666 புதிய பஸ்களை வாங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பஸ்கள் காரணமாக, பயணியர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+