தீபாவளி பண்டிகை.. இன்று முதல் 23ம் தேதி வரை இயக்கப்படும் 16,888 ஸ்பெஷல் பேருந்துகள்.. அரசு அதிரடி
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்றில் இருந்து இயக்கப்படுகின்றன.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கூட்ட நெரிசல்
சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்றில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்த முறை தீபாவளியோடு சேர்ந்து நீண்ட வீக் எண்ட் விடுமுறையும் வருகிறது.

வீக் எண்ட்
சனி , ஞாயிறு விடுமுறையும் தீபாவளியோடு சேர்த்து வருகிறது. இதனால் மக்கள் இந்த முறை அதிக அளவில் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பேருந்துகள்
தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. 3 நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் கூடுதலாக 3 நாட்களில் 10518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை உள்ளிட்ட மற்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு 6370 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி?
சென்னையில் உள்ள வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications