சிறையில் விஜய் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா?..17 கைதிகள் எஸ்கேப்.. தவெக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனி, தேக்கம்பட்டி சிறையில் நேற்று இரவு 17 விசாரணை கைதிகள், காவலர்களை தப்பிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களை தாக்கிவிட்டு கைதிகள் தப்பும் நிலையில் தான் சிறைகள் இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க, மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க, தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது.

Edappadi Palaniswami Theni Jail

வெட்கக்கேடு

மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!. எப்போது பார்த்தாலும் "மைக்" வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட "அண்ணாதிமுக புராணம்" பாடிக் கொண்டிருக்கும் சிடிஆர் நிர்மல்குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!.

ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!.

ஜோதிட பரிகாரமா

அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே முதல்வரே. நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?.

கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?.

சட்டம் ஒழுங்கில் கவனம் தேவை

அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள்,
சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம், இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் "150 நாள் வெற்றி மலர்" வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+