ரிசர்வேஷன் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்.. ரயிலில் பெர்த் இருந்தால் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? பயணிகளின் குடும்பத்துக்கு நிதி உதவி கிடைக்க என்ன வழி இருக்கிறது? இதற்காக ஆன்லைனில் ரயில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஒரு முக்கிய வசதி, இனி நேரடியாகவே ரயில் டிக்கெட் கவுன்டரில் முன்பதிவு செய்பவர்களுக்கும் கிடைக்கப் போகிறது... ஆம் அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

இந்திய ரயில்வேயின் விருப்ப பயண காப்பீட்டு திட்டம், இன்று அக்டோபர் 27 முதல் ரயில்வே முன்பதிவு கவுன்டர்களிலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் தகுதியுள்ள பயணிகள் வெறும் 45 பைசா பிரீமியம் செலுத்தி ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறலாம். சுப்ரீம் கோர்ட்டின் அதிரடியான உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Railway Insurance IRCTC Rules Train Travel

எவ்வளவு காப்பீடு?

இந்தத் திட்டத்தில் ரயில் விபத்து அல்லது காப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்பாராத சம்பவங்களால் பயணி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்கும். நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டாலும் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.

நிரந்தர பகுதி ஊனத்துக்கு ரூ.7.5 லட்சம் வரையும், காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு ரூ.2 லட்சம் வரையும் காப்பீடு கிடைக்கும். உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்வதற்காக ரூ.10,000 வழங்கப்படும். இவை அனைத்தும் காப்பீட்டுக் கொள்கையின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை.

45 பைசா மட்டும்

இந்தக் காப்பீட்டைப் பெற ஒரு பயணிக்கு 45 பைசா மட்டுமே பிரீமியமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை வரிகள் உட்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஏற்கெனவே இந்த வசதி உள்ளது. தற்போது நேரடியாக கவுன்டரில் முன்பதிவு செய்பவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

ஆனால், காப்பீடு பெற விரும்பும் பயணிகள் தங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். டிக்கெட் கட்டணத்துடன் காப்பீட்டுத் தொகையையும் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். ரொக்கமாக 45 பைசா செலுத்த முடியாது. காப்பீட்டு கொள்கை தொடர்பான விவரங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

யாருக்குக் கிடைக்கும்?

இந்த வசதி இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உறுதி செய்யப்பட்ட டிக்கெட் (CNF), ஆர்ஏசி (RAC) அல்லது பகுதியளவு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் (Partially Confirmed) வைத்திருக்கும் பயணிகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு காப்பீட்டைத் தேர்வு செய்யலாம்.

5 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருக்கை அல்லது பெர்த் இல்லாமல் பயணம் செய்தால் இந்த காப்பீடு கிடையாது. 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு, பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும் சரி, விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த இன்சூரன்ஸ் கிடைக்கும்.

இந்த காப்பீடு கட்டாயமில்லை... விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். டிக்கெட் கவுன்டரில் ரிசர்வேஷன் செய்யும்போது காப்பீடு வேண்டுமா என்பதை தெரிவித்து, அதற்கான தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்தினால் போதும்.

கட்டுப்பாடுகள் - விதிமுறைகள்

இந்த காப்பீட்டை பெற விரும்புபவர்கள் சில கட்டுப்பாடுகளையும் கவனிக்க வேண்டும். டிக்கெட் கட்டணம் மற்றும் காப்பீட்டுக்கான 45 பைசாவை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்... ரொக்கமாக செலுத்த முடியாது. ஒரே PNR-ல் பலர் பயணம் செய்தால், காப்பீட்டைத் தேர்வு செய்யும் தகுதியுள்ள ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக 45 பைசா பிரீமியம் வசூலிக்கப்படும்.

ஒருவேளை டிக்கெட்டை ரத்து செய்தால், காப்பீட்டுப் பிரீமியத்தில் 9 பைசா கழிக்கப்படும். பொதுப்பிரிவு டிக்கெட்டுகளுக்கு இந்தக் காப்பீடு கிடையாது.. தகுதியுள்ள முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+