Cyclone Arnab: நாளை கரையைக் கடக்கும் அர்னாப் புயல்.. தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் வலுப்பெற்று, மேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 'அா்னாப்' புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலானது ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதியில் நாளை (அக்டோபர் 28) கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய கிழக்கு அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கடந்த 24-ஆம் தேதி வலுப்பெற்றது. இது மேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 'அா்னாப்' புயலாக வலுப்பெற்று, காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் நிலவியது.

Cyclone Andhra Pradesh Weather

கரையைக் கடக்கும் புயல்

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், செவ்வாய்க்கிழமை (அக். 27) மிக தீவிர புயலாகவும் அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக். 28) முற்பகலுக்குள் கரையைக் கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எந்தெந்தப் பகுதிகளுக்கு மழை

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளுக்கு நகா்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. சுமாா் 3.1 கி.மீ. உயரம் வரை லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை தெற்கு கேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (அக்டோபர் 27) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலை நிலவக்கூடும்.

நாளை மழை

நாளை (அக். 28) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+