17 vs 30? எடப்பாடி பழனிசாமி சொன்ன சொல்! ஸ்டன் ஆன உடன்பிறப்புகள்.. அப்ப சிவி சண்முகம் டீம் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறான தகவல் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.. கட்சிக்குள் எந்த மோதலும் இல்லை என்பதை காட்டும் வகையில் ஓ.எஸ்.மணியன் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருடன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.. 47 எம்எல்ஏக்களில் 17 பேர் மட்டுமே இபிஎஸ்ஸை ஆதரித்து மனு அளித்துள்ள நிலையில் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது..

தமிழகத்தின் 17வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார யுத்தம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

AIADMK crisis

233 எம்எல்ஏக்கள் - தற்காலிக சபாநாயகர்

அவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம்எல்ஏக்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.. பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ விஜய், திமுக சட்டசபை குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்..

ஆனால் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சி.வி.சண்முகத்தின் பெயர் வாசிக்கப்பட்ட போது அவர் அவையில் இல்லை.. சட்டசபைக்கு வந்திருந்த அவர் பதவியேற்காமலேயே பாதியிலேயே அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்ற விபரம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது..

சிவி சண்முகம் அணி

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஒரு அணியாகவும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் மற்றொரு அணியாகவும் செயல்படுவதால் உட்கட்சி மோதல் தீவிரமாக பேசப்படுகிறது..

இன்றைய சட்டசபை கூட்டத்தொடருக்கு அதிமுகவின் 47 எம்எல்ஏக்களும் இரு அணிகளாகவே வருகை தந்தனர்.. அதிமுகவின் தொடர் தோல்வி குறித்தும் எடப்பாடியின் தலைமைக்கு எதிராகவும் சி.வி.சண்முகம் தரப்பு தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்

இந்த களேபரங்களுக்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அது தவறான தகவல் என திட்டவட்டமாக பதிலளித்துள்ளார்.. அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்..

இருந்தாலும், சட்டசபை நிலவரங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை.. மொத்தமுள்ள 47 அதிமுக எம்எல்ஏக்களில் வெறும் 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.. இது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கட்சியில் எழுந்துள்ள பலவீனம் குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது..

அதிமுக உட்கட்சி பூசல்

எஞ்சிய 30 எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி அணியில் இருப்பதாக கூறப்படுவதால் அதிமுகவில் உட்கட்சி கருத்து வேறுபாடு வெளிப்படையாக தெரிகிறது..

கட்சியில் நிலவும் இந்த உட்கட்சி பூசல் மற்றும் அதிகார போட்டி அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. சி.வி.சண்முகம் பதவியேற்காமல் சென்றதும், வெறும் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் வரும் நாட்களில் அதிமுக அரசியலில் மேலும் கவனிக்கப்படும் விவகாரமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+