• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

17 வயசுதான்.. மொத்தம் 22 நாட்கள்.. கோழி பண்ணையில் அடைத்து கதற கதற.. 2 காமுகர்களிடம் சிக்கிய பெண்!

|

சென்னை: 17 வயசு இளம்பெண்ணை கடத்தி ஒரு ரூமில் அடைத்து வைத்து 22 நாட்களுக்கும் மேலாக கதற கதற பலாத்காரம் செய்துள்னர் 2 காம மிருகங்கள்.. இப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.. படிப்பறிவில்லாத காரணங்கள், அதீத மூடபழக்கவழக்கங்கள், நாகரீக வளர்ச்சி இல்லாதவை, சாதீய உக்கிரம் போன்ற காரணங்களால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகமாக கட்டவிழ்த்துப்பட்டு கொண்டே இருக்கின்றன.

17 year old girl molested for 22 days by 2 member gang

இன்னும் ஹத்ராஸ் சம்பவத்துக்கே விடிவு கிடைக்காத நிலையில், அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன.. இப்படித்தான் ஜான்ஸியில் ஒரு காலேஜ் ஹாஸ்டலுக்கு நண்பனை சந்திக்க 17 வயசு சிறுமி வந்திருக்கிறார்.. அவரை பார்த்ததுமே 6 பேர் கொண்ட கும்பல் தரதரவென ஹாஸ்டலுக்குள்யே இழுத்து சென்றுள்ளனர்..

தடுக்க வந்த சிறுமியின் நண்பனையும் அடித்து தாக்கியுள்ளனர். அந்த கும்பலில் ஒருவர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய, மற்றவர்கள் எல்லாரும் சுற்றி நின்று அதை வீடியோ எடுத்தார்களாம். ,இவ்வளவும் செய்துவிட்டு சிறுமியிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயையும் பிடுங்கி கொண்டு போயுள்ளனர். இது சம்பந்தமான விசாரணை இன்னமும் முடிவடையவே இல்லை.. அதற்குள் இன்னொரு 17 வயசு சிறுமி காம மிருகங்களிடம் சிக்கி கொண்டுவிட்டார்.

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் தீர்டோல் என்ற பகுதி உள்ளது.. இங்கு தன் பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார் இந்த பெண்.. வீட்டில் பெற்றோருடன் எதற்கோ சண்டையிட்டு போட்டுவிட்டு, கோபத்தில் வீட்டை விட்டும் வெளியே வந்துவிட்டார். எங்கு போவது என்று தெரியாமல் ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்று திருதிருவென விழித்து கொண்டிருந்த சிறுமியை, அங்கிருந்த ஒரு நபர் நோட்டம் விட்டு கொண்டே இருந்தார்..

நிலைமையை புரிந்து உதவி செய்வதாகவும், தன் வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறினார்.. அந்த வார்த்தையை நம்பி அவருடன் சிறுமி சென்றார்.. ஆனால், அந்நபர் வீட்டுக்கு போகாமைல், பட்னா என்ற கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஊருக்கு ஒதுக்ப்புறமாக இருக்கும் அந்த பகுதியில் ஜனநாட்டம் குறைவுதான்.. அந்த பண்ணையிலேயே சிறுமியை அடைத்து வைத்து பலாத்காரமும் செய்துள்ளார்.. பிறகு தன் நண்பனையும் அந்த பண்ணை வீட்டுக்கு வரவழைத்து அவருக்கும் சிறுமியை விருந்தாக்கி உள்ளார்.. இப்படியே 22 நாட்கள் சிறுமியை 2 பேரும் மாறி மாறி சீரழித்துள்ளனர்.

வீட்டிற்குள் ஆட் நடமாட்டம் இருப்பது போன்ற சந்தேக நடவடிக்கைகள் அந்த ஊர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.. ஏதோ தவறு நடக்கிறது என்று மட்டும் புரிந்து கொண்டு, உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. அதன்பிறகுதான் போலீசார் விரைந்து வந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர். இந்த குற்றவாளிகளில் ஒருவர் கைதாகி உள்ளார்.. இன்னொருத்தர் தப்பிவிட்டதால் அவரை தேடும் பணி தொடர்கிறது... அவரை பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று கட்டாக் நகர போலீஸ் எஸ்பி பிரதீக் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சிறுமி மாவட்ட குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, அங்கிருந்து ஒரு காப்பகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.. நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுமியின் குடும்பத்துக்கு 25 லட்சம் உதவிதொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தை காங்கிரசும், பாஜகவும் கையில் எடுத்துள்ளன.. நவீன் பட்நாயக் அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாக பாஜக தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது... ஆளும் பாஜக அந்தத் தொகுதியில் மக்களை எவ்வாறு எதிர்கொள்ளும் என்றும் கேள்விகளை முன்வைத்து வருகிறருத. இதே குற்றச்சாட்டை காங்கிரசும் சரமாரியாக வீசிவருவதால், ஒடிசா மாநிலத்தில் நிலைமை சீரியஸாக போய் கொண்டிருக்கிறது.

 
 
 
English summary
17 year old girl molested for 22 days by 2 member gang
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X