Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக மாநாட்டிற்கு இந்த 18 பொருட்களை கொண்டு வரவே கூடாது.. அதிரடி தடை.. முக்கியமா இதை கவனிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நாளை மாநாட்டிற்கு 18 பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து மாநாட்டு திடலில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுகிறது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வி.சாலையில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் மாநாட்டுத் திடலும், சுமார் 207 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

தவெக மாநாட்டு பந்தல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக மாநாடு நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

தவெக தலைவர் விஜய் செல்வதற்காக சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரத்யேகமாக சிறப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் செல்லும் சிறப்பு சாலையில் யாரும் நுழையாமல் இருக்க 10 அடியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 10 ஆயிரம் தொண்டர்கள் சீருடையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விஜய் மேடையிலிருந்து நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்காக சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரும் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 600-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதில் 15 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கட்சிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் சார்பில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தவெக மாநாடு நடைபெறும் மாநாட்டுப் பந்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நாளை பட்டாசு வெடிக்கக் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாளை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நாளை மாநாட்டிற்கு உள்ளே கீழ்க்கண்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

1. செல்ஃபி ஸ்டிக்
2. மதுபானங்கள்
3. வீடியோ கேமராக்கள்
4. ஃபிளாஷ் லைட் உள்ள கேமராக்கள்
5. ட்ரோன் கேமரா போன்ற ரிமோட் உபகரணங்கள்
6. ஸ்கேட்டிங் போர்டு, ஸ்கூட்டர்கள்
7. சைக்கிள்-பைக் உட்பட இருசக்கர வாகனங்கள்
8. பதாகைகள்
9. கண்ணாடி டம்ளர்கள் மற்றும் கோப்பைகள்
10. விலங்குகள்
11. சட்டவிரோத பொருட்கள்
12. ரேடியோ தொடர்பு சாதனங்கள்
13. ஆபத்தான பொருட்கள்
14. லேசர் பொருட்கள்
15. ஆயுதங்கள்
16. துப்பாக்கிகள்
17. வெடிபொருட்கள்
18. மற்ற கட்சிகளின் கொடிகள் மற்றும் பேனர்கள்

ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் உடனடியாக த.வெ.க மாநாட்டுத் திடலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தவெக மாநாட்டுக்கு சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைத்து வயதுடையவர்களும் பங்கேற்கவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரக்கூடியவர்கள் யாரேனும் தவறும் பட்சத்தில் அவர்களை கண்டுபிடிப்பதற்கு missing zone அமைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+