2 எம்எல்ஏக்களால் தப்பிக்கும் அதிமுக ஆட்சி.. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா?
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து தமிழக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து தமிழக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கமும் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சபாநாயகரின் தீர்ப்பு சரிதான் என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஹைகோர்ட் தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை '
இந்த தீர்ப்பில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார். இதுதான் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்க போகிறது.

என்ன நிலைமை இப்போது
தற்போது தமிழக சட்டசபையின் பலம் 214ஆக குறைந்து இருக்கிறது. மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 108 பேர் தேவை. அதிமுகவிற்கு 109 பேர் பலம் இருக்கிறது.

என்ன நடக்கும்
இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தடையில்லை என்று தீர்ப்பு வந்து இருப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் சில எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் அவர்கள் வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது. இதை காரணமாக வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஸ்லீப்பர் செல்கள்
ஏற்கனவே தினகரன் அதிமுகவில் தனது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதிமுக அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இதில் ஸ்டாலின் ஏதாவது செயலாற்றுவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications