18 பேரும் பாஜகவினரே இல்லை.. சம்பந்தமே இல்லாதவர்கள்.. சாமி கூட்டிய ஏழரை.. டிவிட்டரில் களேபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான 20 பாஜக வேட்பாளர்களில் 18 பேர் பிற கட்சிகளால் கைவிடப்பட்டவர்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தமிழக பாஜகவை மிக கடுமையாக விமர்சிப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. மத்திய பாஜக அரசையும் கடுமையாக சாடுவதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

சசிகலா ஆதரவு

அண்மைக்காலமாக சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளதாவது:

கைவிடப்பட்ட 18 பேர்

கைவிடப்பட்ட 18 பேர்

தமிழக பாஜக வேட்பாளர்கள் 20 பேரில் 18 பேர் பிற கட்சிகளால் கைவிடப்பட்டவர்கள். இந்த 18 பேருக்கும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை.

சி.ஏ.ஏ.-அதிமுக

சி.ஏ.ஏ.-அதிமுக

இன்னொரு பக்கம் சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய சொல்கிறது பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இருவர் யார்?

இருவர் யார்?

தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பாஜகவின் மாஜி தேசிய செயலாளர் இருந்த ஹெச். ராஜா, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களை தவிர்த்துப் பார்த்தாலும் 17 பேர் என்றுதான் கணக்கு வருகிறது. அப்படியானால் பாஜக தலைவர் முருகனையும் 18 பேர் பட்டியலில் சேர்த்து விமர்சித்திருக்கிறாரா சு.சுவாமி என்கிற கேள்வி எழுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.க்கு தடை கேட்டது யார்?

ஆர்.எஸ்.எஸ்.க்கு தடை கேட்டது யார்?

இதனிடையே சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பதிவில் பாஜகவினர் கடுமையாக திட்டியும் வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இல்லாதவர்கள் என இப்போது வருத்தப்படும் சுப்பிரமணியன் சுவாமிதான் 1990களில் ஜனதா கட்சி தலைவராக இருந்த போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று சொன்னவர் என சுட்டிக்காட்டியதுடன் பேப்பர் கட்டிங்குகளையும் போட்டு அதகளப்படுத்தி வருகின்றனர்.

மே. வங்க வேட்பாளர்கள்

மே. வங்க வேட்பாளர்கள்

மேலும் மேற்கு வங்கத்தில் 60%க்கும் அதிகமானோர் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான் பாஜகவின் வேட்பாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-ல் இருந்து வந்தவர்களா? காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வந்தவர்கள்தானே என்கிற கிண்டல் பதிவுகளும் இதில் பதிவிடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+