கருணாநிதி அப்செட்.. ஜெயலலிதா தலைவிரி கோலம்.. 1989 பட்ஜெட் நாளிலும் இப்படித்தான்
சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக உருவான அரசியல் பதற்றங்கள், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் நடந்த ஒரு கருப்பு அத்தியாயத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த கால தமிழக சட்டசபை சம்பவங்களையும் நினைவுகூர்ந்துள்ளார்.
News focus tamil சேனலுக்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், 1989ம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு, கலைஞர் கருணாநிதி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, நிதியமைச்சராக தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தயாரானார்.

முதல் பட்ஜெட் எதிர்பார்ப்பு
அன்றைய காலகட்டத்தில் அந்த முதல் பட்ஜெட்டைப் பற்றி அனைத்துத் தரப்பினரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், பட்ஜெட்டிற்கு முன்பாக அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதம் தொடர்பான விவகாரங்கள் வெளிவந்து மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தின.
அந்த கடிதங்கள் போலீசாரின் சோதனையில் கைப்பற்றப்பட்டு திமுக அரசால் வெளியிடப்பட்டதால், அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா கடுமையாகக் கொதித்தெழுந்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் சட்டமன்றத்திற்குள் என்ன நடக்கும் என்பதை உளவுத்துறையாலேயே கணிக்க முடியாத அளவுக்குத் தீவிரமான பதற்றம் நிலவியது.
கருணாநிதி கண்ணாடி உடைந்தது
அன்றைய காலகட்டத்தில் இன்றைப்போல டிவி லைவ் வசதிகள் கிடையாது. அச்சு ஊடகங்களின் நிருபர்கள் மட்டுமே செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர். அவைக்குள் நடந்த மோதல்களின் போது போட்டோக்கள் எடுக்கப்பட்டதையடுத்து, அவற்றை நாளிதழ்களில் வெளியிடக் கூடாது என அன்றைய சபாநாயகர் தமிழ்க்குடிமகன் தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தாலும் தடைய மீறி பத்திரிகைகள் அந்த போட்டோக்கள் வெளியிட்டன.
சட்டமன்ற அவைக்குள் இருதரப்புக்கும் இடையே வெடித்த கைகலப்பில் கலைஞரின் மூக்குக்கண்ணாடி உடைந்து விழுந்தது. அதனால் அவர் மிகவும் அப்செட் ஆனார். அப்போது துரைமுருகன் ஆவேசப்பட்டு ஜெயலலிதாவின் புடவையைக் காலால் மிதித்து இழுத்துவிட்டதாக, ஜெயலலிதா அவைக்கு வெளியே வந்து தலைவிரி கோலத்துடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
கலைஞர் அப்செட்
2 தரப்பினரும் அவைக்குள் மைக்குகளைத் தூக்கி வீசி சண்டையிட்டுக் கொண்ட அந்தச் சம்பவம், பட்ஜெட் தாக்கலின் மகிமையையே கெடுத்துவிட்டது என்று பிற்காலத்தில் கலைஞர் தனியாகப் பேசும்போது வருத்தப்பட்டார்,
ஏனென்றால், எப்போதுமே ஒரு அரசின் முதல் பட்ஜெட்டுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். கலைஞர் எவ்வளவோ அனுபவங்களுக்குப் பிறகு தாக்கல் செய்த அந்த பட்ஜெட்டில் பெரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருந்தது
அன்று திமுக அரசு செய்ததைப் போல, தற்போது தவெக அரசு செய்திருப்பதும் பொதுவழியில் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது
உதயநிதி ஸ்டாலின்
பட்ஜெட் உரை என்பது மிகவும் புனிதமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று. இப்போதைய கூட்டத்தொடரிலும் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த பட்ஜெட் உரைகளை மத மாலாக்கள் அணிவித்தும், புனித தலங்களில் வைத்தும் வழிபாடுகள் செய்து எடுத்து வந்தனர்.
அரசுகள் எப்போதுமே தங்கள் முதல் பட்ஜெட்டில் புதிய பல பெரிய திட்டங்களை அறிவித்து மக்களின் நன்மதிப்பைப் பெறவே விரும்பும். ஆனால், பட்ஜெட்டுக்கு முந்தைய நாளிலேயே இத்தகைய அரசியல் பிரச்சனைகளும் அசம்பாவிதங்களும் ஏற்படுவது, அரசின் புனிதமான நோக்கை திசைதிருப்பிவிடும்...
உதயநிதி ஸ்டாலின் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை மிகவும் தேவையற்ற ஒன்று... இதுபோன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மாண்புக்கு உகந்ததல்ல" என்றெல்லாம் தராசு ஷ்யாம் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
