Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மாயமாகும் மளிகை கடைகள்.. 5 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய மாற்றம்.. புள்ளிவிவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் எல்லாருமே பக்கத்தில் உள்ள மளிகை கடைகளில் தான் பொருட்கள் வாங்கினார்கள். இதனால் பல சிறு வணிகர்கள் வாழ்ந்து வந்தார்கள்.. ஆனால் சென்னையில் பலரும் ஆன்லைனில் பொருட்கள் வாங்க தொடங்கி விட்டதால் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மளிகை கடைகள் எல்லாம் வேகமாக அழிந்து வருகிறது. சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 169 சிறிய மளிகை கடைகள் மூடப்பட்டு விட்டதாக மாநகராட்சி புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

ஒரு காலத்தில் மக்கள் எல்லாம் வீடுகளுக்கு பக்கத்தில் இருந்த மளிகை கடைகளில் தான் பொருட்கள் வாங்குவார்கள். அதன் பின்னர் மெல்ல மெல்ல பெரிய கடைகளுக்கு சென்று மொத்தமாக பொருட்களை வாங்க தொடங்கினார்கள். எனினும் சின்ன சின்ன பொருட்களை மளிகை கடைகளில் தான் இன்றும் வாங்கி வருகிறார்கள். ஆனால் அதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக ஆன்லைன் வியாபாரங்கள் மாறின.

Chennai Chennai Corporation grocery

இதனால் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது அதிகரித்துவிட்டது. சாப்பாடு வாங்குவதில் தொடங்கிய ஆன்லைன் மயம், இப்போது வீட்டிற்கு தேவையான அத்தனை மளிகை பொருட்களையும் ஆன்லைனில் வாங்குவது அதிகரித்துவிட்டது. காய்கறிகளையும் ஆன்லைனில் வாங்குவதையே மக்கள் விரும்புவது அதிகரித்துவிட்டது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில் கூட நிலைமை வேகமாக மாறி வருகிறது. ஏனெனில் சலுகை, தள்ளுபடி விலையில் கிடைப்பதால் ஆன்லைனில் பொருட்கள் வாங்க மக்களிடம் வரவேற்பு அதிகமாக உள்ளது.

ஒரு காலத்தில் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் சிறிய மளிகை கடைகள் இருக்கும். அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு அது மிகவும் உபயோகமானதாக இருந்து வந்தது. ஆனால் ஆன்லைன் வர்த்தகம், தொழில் வரி, கடை வாடகை அதிகம் போன்ற பல்வேறு காரணங்களால் சிறிய மளிகை கடைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இப்போது எல்லாம் பால் வாங்க வேண்டும் என்றாலும் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய தெருவெல்லாம் இருக்கிறது.

நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணித்தாலும் மயான அமைதியே பல தெருக்களில் இருக்கிறது. பெரிய சாலைகள், பிரதான சாலைகளில் தான் கடைகள் அதிகமாக உள்ளது, சிறிய தெருக்களில் உருவாகும் கடைகள் வெகு சீக்கிரமாகவே மூடப்படுகின்றன. அந்த வகையில் பல்வேறு காரணங்களால் சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீத மளிகை கடைகள் மூடப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

ஒரு காலத்தில் சென்னையில் 500 சதுர அடிக்கும் குறைவான இடங்களில் 10 ஆயிரத்து 645 உரிமம் பெற்ற சிறிய மளிகை கடைகள் இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 169 கடைகள் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 8 ஆயிரத்து 476 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

மண்டல வாரியாக பார்க்கும் போது, ராயபுரம் மண்டலத்தில் 1,342 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 286 கடைகள் இப்போது செயல்பாட்டில் இல்லை. தியாகராய நகர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 645 மளிகை கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 199 கடைகள் இப்போது மூடப்பட்டுள்ளன.

மண்டலத்தில் 695 கடைகள் செயல்பட்ட நிலையில் 207 கடைகள் மூடப்பட்டுவிட்டது. இப்படி சென்னையில் 5 ஆண்டுகளில் ஒப்பிடும்போது 20 சதவீதம் சிறிய மளிகை கடைகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் ஒரு காலத்தில் 577 பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் இயங்கி வந்தது. இதில், 189 சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டு விட்டதாகவும், தற்போது 388 சூப்பர் மார்க்கெட்டுகள் மட்டுமே இயங்கி வருவாகவம் மாநகராட்சி கூறியுள்ளது.

சிறிய மளிகை கடைகள் மூடப்பட்டு சொத்து வரி வரி உயர்வு, கடை வாடகை அதிகரிப்பு, தொழில் வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு போன்றவற்றை காரணமாக சொல்கிறார்கள் வணிகர்கள். அதேநேரம் ஆன்லைன் நிறுவனங்கள் அறிவித்து வரும் தள்ளுபடிகளும் சிறிய வணிகர்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்துள்ளது.

பெரும்பாலான மளிகை கடைகள் பெரிய லாபம் இன்றி நஷ்டத்துடனே இயங்கி வருவதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள். அன்றாடம் 1000, 1500 கிடைத்தால் போதும் என்று நடத்துபவர்களே ஓரளவு கடையை நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். சம்பளத்திற்கு ஆள் போட்டு எல்லாம் நடத்தக்கூடிய அளவிற்கு மளிகை வியாபாரத்தில் லாபம் இல்லை என்றும் கவலை தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+