சென்னை கொரட்டூாில் ரூ.2500 கோடி ஏமாந்த மக்கள்.. கோயில் நிலத்தில் பிரபல நிறுவன வீடுகள்.. என்ன நடந்தது
சென்னை: சென்னை கொரட்டூாில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி செய்ததாக பலர் புகார்களை தெரிவித்து வருகிறார்கள். சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் உரிய நடவடிக்கை கோாி எடுக்ககோாி மனு அளித்திருக்கிறார்கள். கோயில் நிலத்தில் வீடுகளை கட்டி, ரூ.2,500 கோடி மோசடி செய்ததாக பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் மீது புகாா் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
எந்த ஒரு நிலத்தை வாங்கும் போது பஞ்சமி நிலமா இனமாக கொடுத்ததா கோவில் நிலமா அல்லது 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளாரா என்று பார்த்து வாங்க வேண்டும். ஆனால் பிரபல நிறுவனம் விற்கிறது என்று மட்டும் நினைத்து கண்ணை மூடிக் கொண்டு வாங்கக்கூடாது..இன்றைக்கும் அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது.

ஒரு ஸ்மார்ட் போனிலேயே அனைத்து விஷயங்களையும் அறிய முடியும். ஆனால் இன்றும் சொந்த வீடு ஆசையில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். கொரட்டூரில் கோடிகளை கொட்டி வாங்கிய இடம் கோவில் இடம் என்பது தாமதமாகவே மக்களுக்கு தெரியவந்துள்ளது. நிலத்தின் மதிப்பு பூஜியமாக உள்ளதால், மக்கள் விற்கவும் முடியாமல், பத்திரப்பதிவும் செய்ய முடியாமல், கடனும் வாங்க முடியமால் தவிக்கிறார்கள்.
அதுபற்றி பார்ப்போம். சென்னை கொரட்டூரில் சுமார் 2500 கோடி ரூபாய் செலவில், 300 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கோவில் நிலத்தில் கட்டிக்கொடுத்து ஏமாற்றி விட்டதாகத் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டோர் டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். 15.45 ஏக்கர் கொண்ட இடத்தில் 2036 வீடுகள் உள்ளது. இதில் சர்வே எண் 590, 591 ஆகியவை மட்டுமே கோவில் நிலம் என்பதனை மறைத்து விற்றுவிட்டதாகப் பாதிக்கப்பட்டோர் வேதனையுடன் கூறினார்கள்.
கோயில் நிலத்தில் பட்டா இருப்பதாக புகாா் எழுந்த நிலையில் பிரபல தனியார் நிறுவன உரிமையாளா் மறைத்ததாகத்தாகவும் குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். கோயில் நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், தங்களால் விற்க முடியவில்லை எனவும் வங்கி தரப்பிலும் வேறு ஆவணங்கள் கேட்டு நெருக்கடி தரப்படுவதாகவும், 6 ஆண்டுகளாக மூலப்பத்திரத்தை வழங்கக் கோாி பில்டரிடம் கேட்டும் எந்தப் பதிலும் இல்லை என குடியிருப்புவாசிகள் வேதனை தொிவித்திருக்கிறார்கள்.
அந்த குடியிருப்பு நல சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் கொரட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் 2036 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. அங்கிருந்து வருகிறோம். அண்மையில் வந்த நீதிமன்ற உத்தரவில் என்ன வந்துள்ளது என்றால், நாங்கள் வசித்து வரும் நிலத்தை கோயில் என்று அறிவித்துள்ளனர். இந்த இடத்தில் வீடு கட்டி விற்றதன் மூலம், நாங்கள் கஷ்டப்பட்டு சேர்ந்த 2500 கோடி பணத்தை அவர்கள் எங்களிடம் இருந்து சம்பாதித்து உள்ளார்கள். கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்த வழக்கு நடந்து இருக்கிறது.
எங்களுக்கு எந்த தகவலுமே அவர்கள் சொல்லவே இல்லை.. கடைசி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு வழக்கு நடப்பதே தெரியும். நாங்கள் மேல்முறையீடு செய்யுங்கள் என்று கேட்டோம். ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவே இல்லை.. ஆனால் அவர்கள் எங்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மேலும் காலம் கடத்துவதில் ரொம்ப குறியாக இருக்கிறார்கள்.
இது நம்பிக்கை துரோகம்,கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வரும்.. அதனால் தான் நாங்கள் டிஜிபி சாரை பார்க்க வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் பிளாட்டை விற்கவும் முடியாது.. வாங்கவும் முடியாது. வங்கியில் லோனுக்கு போக முடியாது.. கல்விக்கடன் வாங்கினால் கூட எங்கள் பிளாட்டை நாங்கள் அடகு வைக்க முடியாது.. இன்று எங்கள் பிளாட்களின் வேல்யூ பூஜியம் என்றே காட்டுகிறது..
எங்கள் வாழ்நாள் உழைப்பில், இஎம்ஐயில் வாங்கிய அடுக்குமாடி வீடுகள் இன்று இல்லை என்கிறார்கள். இதனால் எந்த ஆதரவும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாக இருக்கிறோம். எங்களிடம் வீடு விற்ற மனோஜ், சுனில் ரெட்டி, சந்திரசேகர் ரெட்டி ஆகியோர் தான் 2500 கோடி வாங்கி கொண்டு கோயில் நிலத்தில் அடுக்குமாடி கட்டிவிற்றுள்ளார்கள். டிஜிபியிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தோம். அவர் ஆவடி கமிஷனரை பார்க்குமாறு கூறினார். நடவடிக்கை கண்டிப்பாக எடுப்போம் என்றார்" இவ்வாறு கூறினார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications