வந்தே பாரத்.. சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஒரே ஆண்டில் சூப்பர் சம்பவம்
சென்னை: உலகிலேயே மிக முக்கியமான ரயில் பெட்டி தொழிற்சாலையாக உள்ள பெரம்பூர் ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் 2,829 ரயில் பெட்டிகள் தயாரித்து பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் உள்பட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான உற்பத்தி பிரிவாக சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை இருக்கிறது.இந்த தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் 1955ம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் தான் நாட்டின் பெரும்பாலான ரயில்கள் தயாரிக்கப்பட்டன. இன்றும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய இரயில்வேக்கே சென்றாலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. தாய்லாந்து, பர்மா, தைவான், சாம்பியா,பிலிப்பைன்ஸ், தான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக் மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளுக்கு ரயில் பெட்டிகள் ஏற்றுமதி ஆகின்றன.
இதனிடையே சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி ஆலையில் 2023-24-ம் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில் உள்பட பல்வேறு வகைகளில் 2,829 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிக்கும் அயனாவரம் ஐசிஎப் தொழிற்சாலையில்
தற்போது வரை சுமார் 73,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஐசிஎப் ஆலையில் இருந்து தான் நாட்டில் ஓடும் அனைத்து வந்தே பாரத் ரயில்களும் தயாரிக்கப்பட்டன..
இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால். தற்போது சாதாரண ரயில் பெட்டிகளைவிட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இங்கு சாதாரண வந்தே பாரத் ரயிலான அம்ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று கடந்த சில வருடங்களாக வருகின்றன. விரைவில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் 2023-24-ம் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் உள்பட பல்வேறு வகைகளில் 2,829 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டில் 2,072 தான் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த நிதியாண்டில் 757 பெட்டிகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டுள்ளன.
2,829 ரயில் பெட்டிகளில் 1,091 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், மின்தொடர் ரயில் பெட்டிகள், நீண்ட தூரம் பயணிக்கும் மின்தொடர் ரயில் பெட்டிகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 1738 இதர எல்.எச்.பி வகை (நவீன பெட்டிகள்) ரயில் பெட்டிகளும் கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது
8 பெட்டிகள் கொண்ட 45 வந்தே பாரத் ரயில் தொடர்கள் மற்றும் 16 பெட்டிகள் கொண்ட 6 வந்தே பாரத் ரயில் தொடர்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது 22 ரயில் பெட்டிகள் கொண்ட இரண்டு அம்ரித் பாரத் ரயில் தொடர்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறன. இதேபோல் 19 தானியங்கி ஆய்வு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஐ.சி.எஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள்தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications