கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தியவர்கள் கைது.. தனிப்படை அதிரடி.. பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 3 ஆம் தேதி மாதவரம் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். மேலும் எங்கே போக வேண்டும் என்று கேட்டுள்ளார். மாதவரம் செல்ல வேண்டும் என்று சொல்லிய நிலையில், நானே கொண்டு போய்விடுவதாக ஆட்டோ டிரைவர் சொல்லியதாக கூறப்படுகிறது.

kilambakkam koyambedu crime

அந்த பெண் பஸ்சில் செல்வதாக கூறியும், ஆட்டோ டிரைவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றுள்ளார். ஆட்டோ சிறிது தூரம் சென்ற நிலையில், மேலும் இரண்டு பேர் ஆட்டோவில் ஏறியுள்ளனர். அப்போது அந்த நபர்கள் இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், மற்றொரு ஆட்டோவை பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர்.

kilambakkam koyambedu crime

அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து, சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இதில் சந்தேகத்தின் பேரில் போலீசார் 5 பேரை பிடித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆட்டோ டிரைவர் முத்தமிழ்செல்வன் மற்றும் தயாளன் என்ற இரண்டு பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைதான தயாளன் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகிறார்கள். வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

kilambakkam koyambedu crime
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+