2 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கியது... அந்தமானில் கனமழை
சென்னை: தென்மேற்கு பருவமழை, 2 தினங்கள் முன்னதாகவே அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கி விட்டதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. அதன் தாக்கத்தால் மழையும் பெய்து வருகிறது. தெற்கு இந்திய கடல் பகுதியில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை நோக்கி காற்று வந்து கொண்டிருக்கிறது.

இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து சில நாட்களில் தெற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகளை நோக்கி நகர்ந்து செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அறிவித்துள்ளது படி, அரபிக்கடல் வழியாக சென்று கேரளாவில் ஜூன் 6-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் மழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications