Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல்ங்க.. புயல்ங்க.. மேலிடத்தில் "செம நெருக்கம்".. கலர்ஃபுல் கூட்டணி வேற.. திமுக என்ன செய்ய போகிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுடன் கமல் கூட்டணி வைக்கப்போகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை.. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் மய்யம் நெருங்கிகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காங்கிரசுடன் கமல்ஹாசன் நெருங்கி வருகிறார்.. ராகுல்காந்தியின் நடைபயணத்துக்கு, கமல் டெல்லி சென்று ஆதரவு தந்ததும், ராகுலை தனியாக சந்தித்து பேசியதும், அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கமலுக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் இரண்டரை சதவீத வாக்குவங்கியை தன்பக்கம் திருப்ப திமுக தரப்பு யோசித்து வரும் நிலையில், கமல் நேரடியாகவே ராகுலை சென்று சந்தித்து பேசியிருந்ததும், திமுகவின் கவனத்தை ஈர்த்தது.

 2 Key points and can mnm party alliance with dmk, What are the next plans of the Congress party

யாத்திரை: ஒருவேளை காங்கிரஸ் + அதிமுக + கமல் கூட்டணி அமையலாம் என்று யாரோ சிலர் கொளுத்திபோட, இதுவும் திமுக தரப்பில் லேசான கலக்கத்தை அப்போது எழுப்பியதாம்.. காரணம், பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க வேண்டுமானால், அதற்கு காங்கிரசின் தயவு தேவை என்பதை திமுகவும் நன்கு உணர்ந்துள்ளது, மநீமவும் நன்றாக உணர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, யாத்திரைக்கு பிறகு, ராகுல் காந்தியை தனியாக, ஒரு மணி நேரம் கமல் அந்த நேரத்தில் சந்தித்து பேசியிருந்தது, வடமாநில மீடியாக்களில் மிகப்பெரிய விவாதமாகவே நடந்ததாம்.

அந்த பிரத்யேக சந்திப்பு குறித்து நாம் நம்முடைய "ஒன் இந்தியா" தமிழில் அதை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, "காங்கிரஸ் கூட்டணிக்குள் நீங்கள் வரவேண்டும்" என்று கமலிடம் ராகுல் கோரிக்கை வைத்தாராம்.. அதை ஆமோதித்த கமல்ஹாசன், "திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்காதா?" என்று கேட்டிருக்கிறார்..அதற்கு ராகுல், "திமுக அலையன்சில் இருந்து விலகும் யோசனை நமக்கில்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழலை திமுக உருவாக்கும் என்று எனக்கு சந்தேகம்" என்றாராம்.

திமுக கூட்டணி: அதற்கு கமல், "திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் பட்சத்தில், நான் எப்படி உங்கள் கூட்டணிக்கு வரமுடியும்? " என்று கேட்க, "திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் காங்கிரஸுக்கு ஒதுக்கும் சீட்டுகளில் உங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கேற்ப திமுகவிடம் பேசுவோம்" என்று சொல்ல, "காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால், உங்களுடன் கைக்கோர்க்க தயார். மற்றதெனில் நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்" என்று தெளிவுப்படுத்தினாராம் கமல்.
இதற்கு பிறகு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரசுக்கு கமல் ஆதரவு தந்ததுமே, திமுகவுடன் கூட்டணிக்கான அச்சாரமா? என்றும் யூகிக்கப்பட்டது.. முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதுமுதல், தமிழக பட்ஜெட்டை வரவேற்றது முதல், திமுகவுடன் இணக்கமான போக்கையே கமல் கையாண்டு வருகிறார்.. ஆனாலும், காங்கிரசுடனான நெருக்கம் திமுகவுடன் வெளிப்படையாக இல்லை என்றே தெரிகிறது.

 2 Key points and can mnm party alliance with dmk, What are the next plans of the Congress party

ராகுல் பேரணி: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அதாவது, கேரளாவை போலவே, மாநில வாரியாக ராகுல்காந்தியும், பிரியங்காவும், பங்கேற்கும் வகையில், பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாம்.. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இவைகளை நடத்த யோசித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் ராகுல், பிரியங்கா பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நடத்துவது சம்பந்தமாக, திமுக சீனியர் எம்பி ஒருவரிடம் ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்பி பேசியிருக்கிறார்..

அதற்கு அந்த எம்பியும், தலைமையிடம் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதி தந்துள்ள நிலையில், இன்னும் தங்கள் முடிவை திமுக தெரிவிக்கவில்லை.. ஆனால், கமல் கலந்து கொள்ள போவதாக தெரிகிறது. மநீம கட்சியின் நிர்வாக குழுவினரை சந்தித்து அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து கமல் விவாதிக்க உள்ளார்.. அப்போது, சென்னையில் ராகுல் பிரியங்கா பங்கேற்கும் நிகழ்ச்சியை மநீம சார்பில் நடத்த வேண்டும் என கட்சியினர் வலியுறுத்த போகிறார்களாம்.. இதற்கு கமலும் நிச்சயம் ஓகே சொல்வார் என்றும் நம்பப்படுகிறது..

எனினும், கமல் தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் தலைமை முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படியே காங்கிரஸ் ஒப்புக்கொண்டாலும் அதில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பங்கேற்குமா என்பதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது..

 2 Key points and can mnm party alliance with dmk, What are the next plans of the Congress party

எதிர்பார்ப்புகள்: அதாவது, கமலின், மக்கள் நீதி மய்யம் சார்பில், கடந்த பிப்ரவரி 3வது வாரம், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்து, ராகுலையும் வரவழைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அந்த விழாவுக்கு கூப்பிட முடிவானது.. அதாவது, ஒரே மேடையில ராகுல், ஸ்டாலின், கமல் ஆஜராகி, கூட்டணியை உறுதிப்படுத்திவிட வேண்டும் என்பதே அந்த பிளானாக இருந்தது.. இப்போது, சென்னையில் ராகுல் பிரியங்கா பங்கேற்கும் நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் சார்பில் நடத்த வேண்டும் என்ற யோசனை கிளம்பி உள்ளதால், இதை திமுக எப்படி அணுக போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+