பெரிய "விக்கெட்" விழபோகுதாமே.. அவரா?.. சொல்லியடிக்கும் பாஜக.. திருப்பியடிக்கும் திமுக.. தடதட கொங்கு

திமுகவில் இருந்து முக்கிய புள்ளி பாஜக பக்கம் தாவலாம் என்ற தகவல்கள் பரபரக்கின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து திமுக பக்கம் சிலர் வரப்போகிறார்களாம்.. திமுகவில் இருந்து பாஜக பக்கம் சிலர் வரப்போகிறார்களாம்.. அதிமுகவில் இருந்து சிலர் திமுக பக்கம் வரப்போகிறார்கள்.. இப்
படியெல்லாம் யூகமான தகவல்கள் கிளம்பி உள்ளன.

விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், அதற்கான ஆபரேஷனையும் பாஜக கையில் எடுத்துவிட்டது.. ஒருபக்கம் திமுகவை டேமேஜ் செய்து கொண்டே மறுபக்கம், திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை மும்முரப்படுத்தி உள்ளது பாஜக.

ஆனால், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன், மற்றும் திருச்சி சிவா மகன் போன்ற ஒருசிலர் மட்டுமே பாஜக பக்கம் தாவிய நிலையில், பெ
ரிய அளவிலான புள்ளிகள் யாரும் செல்லவில்லை என்றே தெரிகிறது..

 கிளீன் போல்டு

கிளீன் போல்டு

இந்த சூழலில்தான், ஒற்றை தலைமை விவகாரத்தில் சிக்கி கொண்டிருக்கும் அதிமுக நிர்வாகிகள் மீதும் வலையை வீச துவங்கி உள்ளதாம் பாஜக.. அதாவது, திமுக + அதிமுகவின் அதிருப்தியாளர்களுக்கு குறி வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.. அதன்படி, திமுக எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளாராம்.. அவர் கரூரை சேர்ந்தவர் என்கிறார்கள்.. இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் என்ன ஆனது என்று அதற்கு பிறகு தெரியவேயில்லை.

 என்னப்பா தம்பி

என்னப்பா தம்பி

இந்த சமயத்தில்தான், சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்தும் அரசியலிலிருந்தும் விலகினார்... எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று சுப்புலட்சுமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டாலும், இவரை பாஜகவுக்குள் கொண்டு வர, அக்கட்சி முயன்றதாம்.. அதற்காக திமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த சீனியரிடம், சுப்புலட்சுமி பற்றி கருத்து கேட்கப்பட்டதாம்.. அதற்கு அந்த சீனியர், "சுப்புலட்சுமி தொகுதியில் ஏற்கெனவே பாஜக வலுவாகவே உள்ளது.. அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர்தான் வெற்றி பெற்றுள்ளார்.. அந்தம்மாவை இங்கே அழைத்து வந்தால், "என்னப்பா தம்பி" என்று பெயரை சொல்லதான் நாலு பேர் முன்பு கூப்பிடுவார்.. நமக்குதான் சங்கடமா போயிடும்" என்றாராம்.

 தூண்டில்

தூண்டில்

இதையடுத்து, சுப்புலட்சுமியை அழைக்கும் ஐடியாவையே மேலிடம் நிறுத்திவிட்டதாம்.. அதற்கு பதிலாக, திமுக தரப்பிலிருந்து பெரிய தலையை தூக்க தூண்டில் வீசப்பட்டுள்ளதாம்.. அதாவது, பாஜக மகளிரணி நிர்வாகிகளை செந்தில் பாலாஜி எப்படி ஸ்கெட்ச் போட்டு, திமுகவுக்கு இழுத்தாரோ அதுபோலவே, பதிலடி ஒன்றை தர போகிறதாம் பாஜக.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், கொங்கு மண்டலத்திலேயே திமுகவின் முக்கிய தலைகளுக்குதான் வலை வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அந்தவகையில் பாஜகவிடம் சிக்க போவது யார்? என்பது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

4 நாட்களுக்கு முன்பு, கடலூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வடலூரைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.. ஆனால், இதில் எதிர்பாராதவிதமாக, குமரி மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருந்த சந்திரசேகர் பாஜகவில் ஐக்கியமாகி விட்டார்.. "சந்திரசேகர் பக்கா திமுககாரர், இவருக்கு எப்படி பாஜக ஸ்கெட்ச் போட்டது" என்று குழம்பி போனதாம் உள்ளூர் திமுக. இப்படி பாஜக மும்முரத்தை அதிகப்படுத்தி வரும் நிலையில், திமுகவோ சைலண்ட்டாக அதிரடியை காட்ட துவங்கி உள்ளது..

 KKSSR & அனிதா

KKSSR & அனிதா

சில நாட்களுக்கு முன்பு, நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.. "அதிமுகவில் இருந்து திமுகவுக்கு இடம்மாறி வந்தவர்களால்தான் இன்று கட்சி செயல்படுகிறது.. அன்று செந்தில்பாலாஜி,கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு என அதிமுகவை சேர்ந்தவர்கள்தான் இன்று கட்சியை நடத்துகிறார்கள் என்ற ஒரு விமர்சனம் உள்ளது, இது சரியா? அதிமுகவில் இருந்து வேறு யாராவது திமுகவுக்கு வரப்போகிறார்களா? என்ற கேள்வியை நாம் முன்வைத்தோம்.. அதற்கு செந்தில்பாலாஜி சொன்னதாவது:

 ஸ்பீடு + உழைப்பு

ஸ்பீடு + உழைப்பு

அதிமுகவின் தாய்வீடு திமுகதான்.. எங்கள் தாய்வீட்டிற்கு நாங்கள் வருவதற்கு எங்களுக்கு என்ன தயக்கம்.. திமுக பக்கம் வருவதற்கு நிறைய பேர் இன்னமும் தயாராக இருக்கிறார்கள்... இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலினின் ஆளுமைதான்.. " என்றார். அதாவது, முக்கிய தலைவர்களை தங்கள் கட்சிக்கு இழுப்பதில், திமுகவுக்கு செக் வைக்க பாஜக முயலும்போது, அதிமுகவுக்கு செக் வைத்து அடுத்தக்கட்ட நகர்வுக்கு தாவி உள்ளது திமுக.. யார் யாரை இழுக்க போகிறார்கள்? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்..!!

கம்ப்ளைண்ட்

கம்ப்ளைண்ட்

இதனிடையே இன்னொரு தகவலும் சுற்றிக் கொண்டிருக்கிறது.. செந்தில் பாலாஜியை இப்படியே பேசவிட்டுக் கொண்டிருந்தால், திமுகவில் இருக்கும் மற்றவர்களுக்கும் துணிச்சல் வந்துவிடும். இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டுமானால் செந்தில் பாலாஜியை அடக்கிவைக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக தரப்பிலிருந்து டெல்லி மேலிட தரப்புக்கு சொல்லப்பட்டதாம்.. அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட அந்த தலைவர், உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பதாக கமலாலயத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளாராம்.. இதையடுத்து நிலுவையில் உள்ள வழக்கு, விசாரணைகளில் தீவிரம் காட்டி செந்தில்பாலாஜியை ஆஃப் செய்யலாம் என நினைக்கிறதாம் மேலிடம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+